புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013


    

        ""ஹலோ தலைவரே... …   போயஸ் கார்டனின் நிலைமையை அறிந்தவர்களுக் கெல்லாம் திடீர் ஷாக். ஏன் அவரை நீக்கினாங்கன்னு தெரியலைங்கிறாங்க.''

""அப்படி யாரை நீக்கிட்டாங்களாம்?''


""சசிகலா வெளியேற்றப்பட்டு திரும்பி வந்தாரே அப்ப அவருக்கு உதவியாளரா சுரேஷ்ங்கிறவரை ஜெ. நியமிச்சார். இவர் சோவின் சிபாரிசுன்னும், கண்காணிக்கிறதுக்காக நியமிக்கப்பட்டாருன்னும் பேச்சு கிளம்பி, அப்புறம் அதெல்லாம் கிடையாதுன்னு அந்தப் பேச்சு முடிந்துபோனது. கட்சிக்காரங்க அனுப்புற புகார் சம்பந்தப்பட்ட ஃபைல்களை பார்த்து ஜெ.வுக்கே நோட்ஸ் அனுப்புற அளவுக்கு கார்டனில் சுரேஷ் செல்வாக்கா இருந்தார். இவர் சின்னமேடத்துக்கு உதவியாளரா, பெரிய மேடத்துக்கு உதவியாளரான்னு கட்சிக்காரங்களுக்குப் புரியலை. இவருக்குன்னு ஒரு லாபியும் உருவாகியிருந்தது. இந்த நிலைமையில்தான், திடீர்னு கார்டனிலிருந்து சுரேஷ் வெளியேற்றப்பட்டிருக்காரு.''

""செல்வாக்கா இருக்கிறவங்க திடுதிப்புன்னு வெளியேற்றப்படுவது கார்டனில் வழக்கம்தானே?''

""இப்படிப்பட்ட வெளியேற்றம் மூலமா புதுசா யாருக்கு செல்வாக்கு இருக்குன்னு கிடைக்கிற சிக்னலைத்தான் கட்சி நிர்வாகிகள் உன்னிப்பா கவனிப்பாங்க. சுரேஷின் நெட்வொர்க்கிலிருந்த கட்சிக்காரர்களெல்லாம் ஷாக் ஆகியிருக்காங்க. சசிகலா குறித்து சுரேஷ் யாரிடமோ தப்புந்தவறுமா பேசியதாலதான் வெளியேற்றப்பட்டார்னு தகவல்கள் வருது. இதன் மூலமா சசிகலாவோட கை கார்டனில் மறுபடியும் ஓங்கியிருக்குதுன்னு சொல்லும் விஷயமறிந்த கட்சிக்காரங்க, சசிகலா குடும்பத்தினர் வசிக்கும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதியிலும் சொந்தக் காரங்களோட கை கட்சி அரசியலில் ஓங்கியிருக்குன்னு சொல்றாங்க.''

""அப்படியென்ன நடந்ததாம்?''

""நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டைன்னு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மந்திரிகள், மா.செ.க்கள் விவகாரத்தில் திவாகரனின் தலையீடு இருக்குதாம். புதுசா மந்திரியானவங்க வரைக்கும் திவாகரன் கை ஓங்கியிருப்பதாகவும் இந்த மாவட்டங்களில் இன் னும் சில மாற்றங்கள் ஏற்படும்னும் கட்சிக்காரங்க சொல்றாங்க. உதயகுமார் மந்திரியானதிலும், ராமநாதபுரம் மா.செ.வா முனிய சாமி நியமிக்கப்பட்டதிலும் சசிகலா ரோல் இருக்குதாம். ஏற்காடு தொகுதி நன்றியறிவிப்பு கூட்டத்துக்கு போனப்ப கார் ஆக்சிடென்ட்டில் சிக்கினார் மந்திரி வைத்திலிங்கம். அதுக்கப்புறம் சில நாட்கள் கழிச்சி நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரியில் அட்மிட்டானார். நால்வர் அணியில் நத்தம் விஸ்வநாத னும், வைத்திலிங்கமும் சசிகலா ஆளா இருந்தவங்க. சசி தரப்பு மேல நடவடிக்கை எடுக்கப்பட்டப்ப ஒதுங்கிட் டாங்க. அதில் சசிகலாவுக்கு செமத்தியான கோபம். சமீபத்தில் அவர் டோஸ் தான் வைத்திலிங்கத்தை ஆஸ்பத்திரிக்கு போக வச்சிடிச்சின்னு மேலிடத்து தகவல்.''

""சசிகலா மேலேயும் அவரோட சொந்தக்காரங்க மேலேயும் ஜெ. நடவடிக்கை எடுத் தப்பவே மன்னார் குடி வட்டாரத் தினர் ரொம்ப தெம்பா, இப்ப எங்க பவர் குறைஞ் சிருக்கலாம். எலெக் சன் வர்றப்ப பாருங்க.. வேட்பாளர் தேர்வு, பண விவகாரம் இதை யெல்லாம் கட்சிக்காரங் களை நம்பி ஜெ. செய்ய மாட்டார். அப்ப எங்க கைதான் ஓங்கும்னு சொல் லிக்கிட்டிருந்தாங்க. நீ சொல் கிற நிலைமைகளை பார்க்கு றப்ப அப்படித்தானே இருக் குது. சரி.. இத்தனை இருந் தும் செயற்குழு-பொதுக்குழு கூட்டங்களில் சசிகலா கலந்துக்கலையே.. நீக்கப் பட்ட அவரை மறுபடியும் செயற்குழு உறுப்பினரா ஜெ.வும் சேர்க்கலையே!''

""ஒவ்வொரு ஸ்டெப் பாகத்தான் முன்னேற்றம் ஏற்படும்னு சசிகலா தரப்பினர் நம்பிக்கை யோடு சொல்றாங்க தலைவரே.. … அ.தி.மு.க பொதுக்குழுவில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் ஜெ.வுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தரப்பிலிருந்து அ.தி.மு.க.வுக்கு தூது வந்திருக்குதாம். இதை ஜெ.வே கட்சியின் முக்கிய நிர்வாகிகள்கிட்டே சொல்லியிருக்காரு. ராகுலுக்கு ஆரம்பத்தில் இருந்தே கலைஞ ரைப் பிடிக்காதுங்கிறதையும் கனிமொழி 6 மாச காலம் ஜெயிலில் இருந்ததுக்கு ராகுல்தான் காரணம் னும் அவர் தரப்பிலிருந்து ஜெ.கிட்டே சொல்லி, அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்குத் தயார்னு சொல்லியிருக்காங்களாம். ஜனவரிக்கு மேல்தான் எதையும் யோசிக்க முடியும்னு ஜெ. சொல்லியிருக்காராம்.''

""அதுவரை மற்ற கட்சிகளின் மூவ்களை கவனிப்பாரா?''

""பா.ஜ.க.வுடனான டச் தொடருதாம். தேவைப்பட்டால் ஜெ.வும் மோடியும் நேரடி யாக சந்தித்துப்பேசலாம்னு பா.ஜ.க. தரப்பில் சொல்றாங்க. மூன்றாவது அணி எப்படி உரு வாகப்போகுதுங்கிறதைப் பொறுத்துதான் ஜெ.வோட அடுத்த மூவ் இருக்குமாம். அ.தி. மு.க.வோட தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக போயஸ் கார்டனில் நவீன கம்ப்யூட்டர்களோடு ஒரு மினி கண்ட்ரோல் ரூம் செயல்பட்டுக்கிட்டி ருக்குது. தேசிய அளவில் எல்லா ஊடகங்களிலும் வரும் செய்திகள் எல்லாம் இதில் அப்டேட் செய்யப்பட்டு, ஜெ. பார்வைக்கு உடனுக்குடன் கொண்டு செல்லும் வேலையை ஒரு சாஃப்ட்வேர் டீம் செய்துக்கிட்டிருக்குது. இந்த டீம்தான் பொதுக்குழு தீர்மானங்களை ஜெ. சொன்னபடி ரெடி செய்ததாம். டீம் தரும் விஷயங்களை வைத்து ஜெ. தனக்கு வேண்டி யவங்ககிட்டே விவாதிக்கிறாராம்.''

""தி.மு.க. எடுத்த தேர்தல் நிலைப்பாடு தொடர்பா தோழமைக் கட்சிகள் தயங்குதுன்னு போன முறை பேசியிருந்தோம். அது நம்ம நக்கீரனில் வெளியான அன்னைக்கு கலைஞரை சந்திச்சிட்டாரே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்!''

""தி.மு.க. பா.ஜ.க. பக்கம் போயிடுமோன்னு சிறுத்தைகள் தரப்பில் சிலர் யோசிச்சாங்க. அவங்க கணக்கு, அ.தி.மு.க.வில் சேர்ந்திடலாம்ங் கிறதுதான். பா.ஜ.க. இருக்கும் அணியில் சிறுத் தைகள் இருக்காதுங்கிறதில் திருமா உறுதியா இருந்தார். அதே நேரத்தில், அ.தி.மு.க. பக்கம் போவதா கூடாதான்னு யோசனையில் இருந்தார். காங்கிரசோடும் பா.ஜ.க.வோடும் கூட்டணி இல் லைன்னு கலைஞர் தெளிவுபடுத்தியதும், சனிக் கிழமையன்னைக்கு கலைஞரை சந்திச்சாரு. தன்னோட ஆதரவை உறுதிப்படுத்திட்டாரு.''

""முஸ்லிம் லீக்கும் விடுதலைசிறுத்தைகளும் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்திட்டாங்க. ம.ம.க.வும் புதிய தமிழகமும் என்ன நிலைப்பாட் டில் இருக்காங்களாம்?''

""ம.ம.க.வோட செயற்குழு கூட்ட தேதி தள்ளிப்போயிருக்குது. மு.க.ஸ்டாலின் ஹைதர் அலியை தொடர்பு கொண்டு பா.ஜ.க.வோடு போவோம்னு பத்திரிகைகளில் வரும் செய்தியை நம்ப வேண்டாம். எதுவாகயிருந்தாலும் என்னிடம் பேசுங்கன்னு சொன்னாராம். ம.ம.க.வும் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் முடிவை 24-ம் தேதி எடுக்கலாம். புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரை தென்காசி தொகுதியில் ஜெயித்து எம்.பி.யாகணும். அதற்கான வழி என்னங்கிறதை பற்றி மட்டும்தான் யோசிக்கி றாரு. அவரோட கட்சியோட நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமி திடீர்னு ஜெ.வை சந்திச்சி பரபரப்பை உண்டாக்கினாரு. எப்ப கட்சி மாறப் போறீங்கன்னு அவர்கிட்டே கேட்டா, எங்க கட்சித் தலைவர்கிட்டே 6 மாசமா பேசவே முடியலை. தொகுதி நிலைமைகளை விவாதிக்க முடியலை. அதனாலதான் முதல்வரை சந்திச்சி தொகுதி நலனுக் கான கோரிக்கைகளை வச்சேன்னு சொல்றாரு. தென்காசியில் எம்.பியாக தி.மு.க கூட்டணி சரிப் படுமாங்கிறதைப் பொறுத்துதான் டாக்டரோட முடிவு இருக்கும்னு அவர்கூட இருக்கிறவங்க சொல்றாங்க.''

""உளவுத்துறையின் ஏ.டி.ஜி.பி. அசோக்குமாரும் டி.ஜி.பி.யாக்கப்பட்டு அதே துறையின் டி.ஜி.பி.யாக்கப்பட்டிருக்காரே, அப்படின்னா இதுவரை உளவுத்துறைக்கும் டி.ஜி.பி.யா இருந்த சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு அந்த பவர் கிடையாதா?''

""போலீஸ் வட்டாரத்தில் கிடைத்த தகவல்களை நான் சொல்றேன்.. ...  அசோக்குமார் ஏற்கனவே சி.பி.ஐ.யில் இருந்தவர் என்பதால் எம்.பி. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய உளவுப்பிரிவிலிருந்து தகவல்கள் பெற வசதியா இருக்கும்னு நினைத்துதான் அவரை மாநில உளவுத்துறை டி.ஜி.பி.யா நியமிச்சிருக் காங்களாம். தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவர் அசோக்குமார். முன்பு டி.ஜி.பி.ங்கிற முறையில் ராமானுஜம் சில விவரங்களை கேட்டு வாங்குவார். இப்ப அவரை ஈஸியா பை-பாஸ் பண்ணி அசோக்குமார் தன் போக்கில் செயல்படு வாருங்கிறதுதான் காவல்துறை வட்டாரத்தின் கணிப்பு.''



 லாஸ்ட் புல்லட்!

கேப்டன் டி.வி செய்தியாளர்கள் மீது சில வாரங்களுக்கு முன் அ.தி.மு.க தரப்பினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஊடகத்தினர் நள்ளிரவில் போராட்டம் நடத்தி கைதாகினர். தாக்கியவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யவேண்டும் எனப் போராடியவர்களில் கேப்டன் டி.வி. செய்திஆசிரியர் தினேஷ்குமார் முக்கியமானவர். சில நாட்களுக்கு முன் கேப்டன் டி.வியின் செய்தியில், தேர்தலுக்கு முன் ஜெ. அளித்த வாக்குறுதிகளையும் அதற்கு மாறாக இப்போது அவர் பேசுவதையும் வீடியோ ஆதாரங்களுடன் ஒளிபரப்பினர். இந்நிலையில், கேப்டன் டி.வியில் பணியாற்றிய பெண் துணை ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த சனியன்று இரவு 1 மணியளவில் தினேஷ்குமாரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினேஷ்குமார்.

தமிழக இளைஞர் காங் கிரசின் தென்சென்னை நாடாளு மன்றத் தொகுதி தலைவர் ஹரி கிருஷ்ணன். இவரது தந்தை சேது ராமன் இறந்துபோனதால் கராத்தே தியாகராஜனை அழைத்துக் கொண்டு துக்க வீட்டுக்குச் சென் றார் ப.சிதம்பரம். சோகம் சூழ்ந்த வீட்டின் சூழலை அறிந்த ப.சி, சட்டெனத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து அரைமணிநேரத்திற் கும் மேலாக துக்கம் விசாரித்தார். நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் துக்கம் விசாரிக்கும்போது இப்படி தரையில் உட்கார்வது செட்டிநாட்டு வழக்கம். அதே பாணியில் கட்சிப் பிரமுகர் வீட்டில் ப.சி. உட்கார்ந்ததை சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

டெல்லியின் முதல்வராகப் பதவியேற்க ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தயாராகிவந்த திங்களன்று மதுரையில் திடீர் பரபரப்பு. மதுரை மாநகராட்சியில் அவருக்கு கடந்த மே மாதம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் விவகாரம்தான் இந்த பரபரப்புக்கு காரணம். ஏற்கனவே அமைச்சருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கிய சர்ச்சை ஓயாத நிலையில் இப்போது இந்த புது பரபரப்பு. மதுரை மாநகராட்சியில் நடக்கும் திருவிளையாடல்கள் தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கிவிட்டன.

ad

ad