புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

திரைக்கூத்து!
கொக்கரக்கோ!



தமிழ் சினிமாவுக்கு புதிய தலைமைச் சங்கம். தமிழ் சினிமா உலகத் தையே ஆறு மாதங்கள் முடக்கி வைக்கலாம்.இப்படி ஏகப்பட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடந்திருக்கு இண்டஸ்ட்ரியில்.


முன்கூட்டியே தேர்தல்!


அமீர் தலைமையிலான ஃபெப்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் மே 2014 வரை இருக்கு. ஆனாலும் முன்கூட்டியே தேர்தலை நடத்தும் ஐடியாவில் இருக்காங்க. இதற்குக் காரணம் ஜெ.வுக்கு ஃபெப்சி நடத்தப்போகும் பாராட்டு விழாதான்.


தேர்தல் நேரத்துல பாராட்டு!


சமீபத்தில் அமீர் தலைமையில் ஃபெப்சி நிர்வாகிகள் ஜெ.வை சந்தித்து கோரிக்கை வைத்தபோது ஜெ.வுக்கு பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டார்கள். பாராளு மன்றத் தேர்தல் நடக்கும் சமயம் பாராட்டு விழா நடந்தா சினிமா உலக சப்போர்ட் ஜெ.வுக்கு இருப்பதுபோல் இமேஜ் உண்டாகும் என்பதால் ஏப்ரல் 19-ந் தேதி ஜெ. தரப்பு ஒதுக்கியிருக்காம்.

பலன் பெற்றுத் தருபவர்களுக்கே பதவி!


இந்த விழா மூலம் ஃபெப்சியின் சில கோரிக்கைகள் நிறைவேறும். அப்படி நிறை வேறுவதால்... "இந்தப் பலனைப் பெற்றுத் தந்த ஃபெப்சியின் நிர்வாகிகளே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும்' என்பது பிளான். அதற்காகவே சங்க தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆலோசிக்கிறதாம் ஃபெப்சி தலைவர் அமீர் அண்ட் கோ.

வரிசை கட்டும் எதிராளிகள்!


கடந்த முறை அமீரை எதிர்த்துப் போட்டியிட்ட விசு, மாஜி தலைவர் வி.சி.குகநாதன், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் அமீருக்கு எதிராக ஏற்கனவே இருக்கிறார்கள். இப்போது... ஆர்.கே.செல்வமணியும், ஃபெப்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட ரொம்பவே தீவிரமாக இருக்கிறார்.

ஃபெப்சிக்கு அமீர் தலைவரான பிறகு தயாரிப்பாளர்களுக்கு எதிராக ஃபெப்சி செயல்படுது என்கிற வருத்தம் பெரிய திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் டீமுக்கும், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் ராதிகா டீமுக்கும் இருக்கு. சமீபத்தில் கூட, "எனது படப்பிடிப்பில் ஃபெப்சி ஆட்கள் பிரச்சினை பண்ணாமல் பாதுகாப்பு தரணும்' என ராதிகா போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"பேக்கேஜ் பிளான்' நெருக்கடி!

ஏற்கனவே ஃபெப்சி மீது கடுப்பாக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை மேலும் காட்டமாக்கியிருக்கு ஃபெப்சியின் "பேக்கேஜ் பிளான்' ஆலோசனை.

"நிறைய புதிய தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க வந்து பாதியிலேயே படத்தை கைவிட்டுட் டுப் போயிடுறாங்க. அதனால் சிறிய மற்றும் புதிய தயாரிப்பாளர்கள் தங்கள் படத்திற்கு 40 நாட்கள்  ஷூட்டிங் நடத்துவதாக இருந்தால் தொழி லாளர்களின் 40 நாட்களுக்கான சம்பளத்தையும் முன்கூட்டியே அந்தத் தொழிலாளி உறுப் பினராக இருக்கும் சங்கத்தில் கட்டிவிட வேண்டும். அந்தப் புரொ டியூஸர் பாதி யிலேயே படத்தைக் கைவிட்டாலும் எங்களுக்கு அதுபத்தி கவலையில்லை.' இதுதான் ஃபெப்சி ஆலோசனை செய்து வைத்திருக்கும் "பேக்கேஜ் பிளான்.'

நிராகரித்த கில்ட்!


சினிமா மற்றும் டி.வி. சீரியல் தயாரிப்பாளர் களின் சங்கமான "கில்ட்'டை தொடர்புகொண்ட ஃபெப்சி செயலாளர் சிவா, "உங்க சங்கத்துக்கும் எங்க சங்கத்துக்கும் டை-அப் வச்சுக்கலாம் டை-அப்பு... அப்படியே பேக்கேஜ் பிளானையும் அமலாக்கலாம், வர்றீகளா?' என அழைப்பு விடுத்தார். "இந்த பேக்கேஜ் பிளான் தயாரிப்பாளர்களை டேமேஜ் பண்ற பிளான்' என  ஃபீல்பண்ணிய கில்ட் தலைவர் நாக்பால் அழைப்பை நிராகரித்து விட்டார்.

ஆறுமாசம் லீவு!


சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பேசிய பலரும், "ஃபெப்சி நம்மள ரொம்ப இம்சை பண்ணுது.  பணம் போடுற நாம அஞ்சாறு மாசத்துக்கு ஷூட்டிங்கை நிறுத்தி வைக்கலாமா?' எனக் கேட்டு விவாதிச்சிருக்காங்க.

புதுசா ஒரு சங்கமா?

"ஃபெப்சி, கவுன்சில், கில்ட், விநி யோகஸ்தர் கூட்ட மைப்பு, திரையரங்க உரிமையாளர் சங்கம், திரையரங்க  உரிமை யாளர் சம்மேளனம்... இப்படி ஏகப்பட்ட சினிமா அமைப்புகள் இருக்கு. இந்த சங்கங்களின் நிர்வாகிகள் சிலரை ஒண்ணுசேர்த்து புதிய சங்கம் ஒண்ணு தொடங்கலாம். இதற்குத் தலைவரா டைரக்டர் சங்க தலைவரை நியமிக்கலாம்' என கடந்த வாரம் கவுன்சில் தலைவர் கேயாரை சந்தித்துப் பேசினார் டைரக்டர் கள் சங்கத் தலைவர் விக்ரமன். ஆனால் கவுன்சில் தரப்பில் இந்த புது சங்க ஐடியா மீது ஆர்வம் இல்லையாம்.


 உஷ்...!

"ஐ ஆம் காட்' நடிகரின் தயாரிப்பில் அவரின் தம்பி நடித்த "ஆற்றுப் படிக்கட்டை' குறிக்கும் படம் முழுவதுமாக முடிந்து விட்டது. "பரதேசி' டைரக் டரின் உதவியாளர் இயக்கி யிருக்கிறார். படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தும்கூட... இரண்டு வருடமாக கிடப்பில் போட்டிருக்கிறார் "ஐ ஆம் காட்' நடிகர்.

"காட்' நடிகரின் வருமானத்துக்கு பெரிய அளவில்  வரி கட்ட வேண்டுமாம். இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணாமல் கிடப்பில் போட்டால் நஷ்டக் கணக்கு காட்டலாம் என "காட்' நடிகரின் "தணிக்கையாளர்' சொன்னதால்தான் இந்த கிடப்புக் கிடக்குதாம். இதனால் நடிகருக்கும் அவரின் தம்பிக்கும் இடையே மனஸ்தாபம்னு சொல்லிக்கிறாங்க.

ad

ad