புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

என்னை பதவியிலிருந்து நீக்க, நாமல் ராஜபக்ச, வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை!- பி.பீ. ஜெயசுந்தர
நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை என நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்சவுக்கு என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தேவையிருந்தால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் நேரடியாக அதனை தெரிவித்து என்னை பதவியில் விலக்க முடியும்.
அப்படி சொன்னால் ஜனாதிபதி கட்டாயம் அதனை செய்வார். இதற்காக நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ஸவுடன் சேர வேண்டும் என்ற அவசியமில்லை.
அப்பா இவரை வைத்திருக்க வேண்டாம் அரசாங்கத்திற்கு கூடாது என்று நாமல் ராஜபக்ச நேரடியாகவே ஜனாதிபதியிடம் கூறலாம். பிள்ளை கூறுவதை தந்தை கேட்பார்.
அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறுவதை விட நாமல் கூறுவதை ஜனாதிபதி ஏற்பார். நாமல் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்.
நான் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் அவரது அமைச்சில் வேலை செய்வதால் சிலர் அமைச்சர் பசிலின் அணியை சேர்ந்தவன் என்று கூறுகின்றனர்.
நான் காலையில் இருந்து மாலை வரை ஜனாதிபதியை சந்திப்பவன். நாங்கள் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி இதன் பின்னணயில் இருக்கின்றார் என்பது, எங்களால் வேலை செய்யும் போது புரிந்து கொள்ள முடியும் என்றார்.
திறைசேரியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறிவருகிறார்.
தனது அமைச்சின் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதில் ஜயசுதந்திர தடையாக இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி வருகிறார்.
வீரவன்ஸவின் இந்த குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் ஜயசுந்தரவை திறைசேரியின் செயலாளர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற நாமல் ராஜபக்சவின் மறைமுக திட்டம் இருப்பதாக பேசப்படுகிறது.
இது குறித்து சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் ஜயசுந்தர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ad

ad