புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது!
சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரேயன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது.
தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் முரசுகொட்டிய வேளை, சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரேயன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது.
தனது மூன்றாண்டு முதற்தவணைக் கால அரசவையினை நிறைவு செய்,து இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவையினை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூட்டியிருந்தது.
டிசெம்பர் 6-7-8ம் நாட்களில் கூடியிருந்த இந்த அமர்வில் ஒரு தொகுதி உறுப்பினர்கள் சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் இருந்து தொலைத் தொடர்பு தொழிநுட்ப வாயிலாக கலந்து கொண்டிருந்தனர்.
அரசவை அமர்வு, செயலமர்வு என இடம்பெற்றிருந்த இந்நாட்களில் விவாதங்கள், கருத்துப்பட்டறைகள், தீர்மானங்கள், சிறப்புரைகள் என பல்வேறு விடயங்கள் நிகழ்விற்கு வலுவூட்டி இடம்பெற்றிருந்தன.
அங்குராப்பண நிகழ்வு
அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் தமிழீழ விடுதலைக்கான தங்களது தோழமை உரையினை வழங்கியிருந்தனர்.
தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் ஈழவிடுதலைக்கான தமிழக மக்களது தோழமைச் செய்தியினை காவி வந்திருந்தனர்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அவர்களும் சிறப்புரையினை வழங்கியிருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுப் பிரதிநிதிகள் மற்றும் மேற்சபை உறுப்பினர்களது உரைகளும் இடம்பெற்றிருந்தன.

ad

ad