புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

றெக்சியன் கொலை வழக்கு!- ஈபிடிபி கமல் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும்  ஈபிடிபி மாவட்ட அமைப்பாளருமான  க.கமலேந்திரனை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் கே.கமலேந்திரன், இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட க.கமலேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த கொலை தொடர்பில் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் மனைவியும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான குற்றவாளிகள் மூவருக்கும் டிசம்பர் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான கமலேந்திரன்,றெக்சியன் மனைவி அனிதா மற்றும் யசிதரன் ஆகிய மூவருக்குமே விளக்கமறியல் டிசம்பர் 31ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான றெக்சியனின் மனைவி அனிதா,யசிதரன் மற்றும் கமல் ஆகியோரை சிறையில் சென்று பார்ப்பதற்கு இதுவரை காலமும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஊர்காவற்றுறை திறந்த நீதிமன்ற நீதவான் மகேந்திரராஜா உத்தரவின் படி எதிர்காலத்தில் அவர்களை சிறையில் சென்று பார்வையிட இன்று அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், றெக்சியனின் மனைவி தனது பிள்ளைகளை சந்திப்பதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிய போது அதற்கும் நீதிபதி அனுமதி வழங்கினார்.

ad

ad