புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

வட மாகாணசபையின் உத்தரவுக்கு இராணுவம் செவிசாய்க்க அவசியம் இல்லை: கிளிநொச்சி தளபதி
போர்க்காலத்தில் இலங்கை இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டது. தற்போது அதே இராணுவம் அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்று கிளிநொச்சி இராணுவப் படையினர் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரச பத்திரிகைக்கு செவ்வி வழங்கியுள்ள அவர், மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மீண்டும் ஒருமுறை ஆயுதப் போராட்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் படையினர் கவனமாக இருப்பதாக உதய பெரேரா குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணசபையில் ஆட்சியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக உள்ளது என்று கூறிவருகிறது.
எனினும் இலங்கை இராணுவம் மாகாணசபைகளுக்கு கட்டுப்பட அவசியமில்லை.
மத்திய அரசாங்கம் அதுவும் ஜனாதிபதியே இராணுவத்துக்கு தளபதியாக இருக்கிறார். எனவே கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் வெறுமனே அரசியல் நலன் சார்ந்தவை என்று பெரேரா குறிப்பிடடுள்ளர்.
தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் நலன்களும் இதில் அடங்கியுள்ளன என்று பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad