புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013

வடக்கில் படைகளை அகற்ற ஐ.நாவிடம் உதவி கோர மக்களுக்கு உரிமை உண்டு!- விக்கிரமபாகு கருணாரட்ண
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஐ.நா. அமைதிப் படையின் உதவியை வடக்கு மக்கள் கோரலாம். வடக்கிலிருந்து இராணுவ ஆளுநரை நீக்குவதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்தும் போராடும் என்று தெரிவித்துள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான கலாநிதி விக்கி ரமபாகு கருணாரட்ண.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
ஒரு பிரதேசத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தல்களோ அல்லது இடையூறுகளோ ஏற்பட்டால், இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுமாறு மக்களால் கோரிக்கை விடுக்க முடியும்.
ஐ.நா. சாசனத்தின் பாதுகாப்பு உரிமை என்ற சரத்தின் கீழ் இந்தக் கோரிக்கையை விடுக்க முடியும்.
எனவே, வடக்கு மக்களுக்கும் இராணுவத்தால் தொடர் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் ஏற்பட்டால் அந்த மக்களாலும் இந்தக் கோரிக்கையை விடுக்க முடியும்.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் துருக்கியின் நிலைதான் இங்கும் உருவாகும் என்பதை அரசு உணரவேண்டும்.
இராணுவப் பிரசன்ன குவிப்பு தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரே ஆளுநராக இருக்கின்றார். அவரை நீக்கிவிட்டு சிவில் அதிகாரியயாருவரை நியமிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராடும் என்றார்.

ad

ad