புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

தேர்தல் கமி~ன் இணையத்தளத்தை முடக்க சீனா முயற்சித்ததா? விசாரணை ஆரம்பம்

டில்லியில் சட்ட சபை தேர்தல் நடைபெற்ற சமயத்தில் டில்லி தேர்தல் கமிஷன் அலுவலக இணையத்தளத்தில் ஊடுருவி, இணையத்தளத்தை முடக்க சீனர்கள் முயற்சி செய்த தகவல் வெளியாகி உள்ளது. இது
உண்மை என கண்டறிய முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைக்கான புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக, டிசம்பர் 04ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இச்சமயத்தில், டில்லி தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தேர்தல் தொடர்பான தகவல்களை முடக்கும் வகையில், சீனர்கள் பலர் தேர்தல் கமிஷன் இணையத்தளத்திற்குள் ஊடுருவி உள்ளனர். இவர்கள், நொய்டா பகுதி வழியாக ஊடுருவியது இன்டர்நெட் ப்ரோட்டோகால் முகவரி (ஐ.பி.), மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இணையதள சர்வர் சீனாவில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. சேர்ச் என்ஜினை முடக்கியதன் மூலம் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 3ம் திகதி முதல், டிசம்பர் 4ம் திகதி இரவு வரை சேர்ச் என்ஜின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 04ம் திகதி வாக்குப்பதிவுகள் முடியும் வரை இந்த சிக்கல் தொடர்ந்தது.
இருப்பினும் ஃபயர்வால்”களை முடக்கும் திட்டம் வெற்றி பெறாததால் இணையத்தளத்தில் இருந்த தகவல்களை அவர்களால் அழிக்க முடியவில்லை. ஃபயர்வால்’ களை முடக்க முடியாததால் அவர்கள் சேர்ச் என்ஜினின் செயல்பாட்டை முடக்கி உள்ளனர். சீனாவின் இந்த ஊடுருவல் மற்றும் சைபர் தாக்குதல் முயற்சியை தேர்தல் அலுவலக ஐடி நிபுணர்கள் கண்டுபிடித்து நிருபித்துள்ளனர்.
தேர்தல் கமிஷன் இணையத்தளத்தை முடக்குவதற்காக 2 மணி நேரத்தில் சுமார் 50,000 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அலுவலகத்தின் எஸ்.எம்.எஸ். மற்றும் கோல் சென்டர் சேவையை நெருங்க முடியாததால் தேர்தல் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கண்காணிக்க மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் இந்திய கணினி அவசர பதில் குழுவிற்கு (சி.இ.ஆர்.டி.) தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நோட்டீஸ் அடிப்படையில் சி.இ.ஆர்.டி. நடத்திய ஆய்வில் சீன சேவர்கள் மூலம் நோய்டா வழியாக இந்த ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது நொய்டாவில் உள்ள கணனிகளின் ஐ.பி., முகவரிகளை இதற்காக சீனர்கள் அழித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஐ.டி. த்துறை வல்லுநர்களுடன் தேர்தல் கமிஷன் அவசர கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், தேர்தல் தகவல்கள் எதுவும் அழிக்கப்படவில்லை எனவும், அவர்கள் சேர்ச் என்ஜினை மட்டும் முடக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகி உள்ளதாகவும், இருப்பினும் இது எதனை குறி வைத்து எதற்காக நடத்தப்பட்டது என்பதை சி.ஈ.ஆர்.டி., தான் முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் எனவும் தேர்தல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் அலுவலக இணையத்தளம் என்பது பொது டொமைன் மூலம் தேர்தல் நடைமுறைகள் குறித்து தகவல்களை மக்களுக்கு அளிப்பதற்கானதாகும். இதில் ஊடுருவி டில்லி தேர்தல் தொடர்பான எந்த தகவலை அழிக்க நினைத்தார்கள் என்பது புரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன், இத்தகைய தாக்குதல்களை சமாளிக்க நவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்த திட்டமிட்டுள்ளது.
2013ல் இந்திய இணையத்தளங்கள் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்திருப்பதாக சி.இ.ஆர்.டி.யின் இரகசிய அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், 2013ம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 4,191 இணையதளங்களும், ஜுலை மாதத்தில் 2,380 இணையத்தளங்களும், ஜுன் மாதத்தில் 2,858 இணையத்தளங்களும், மே மாதத்தில் 1,808 இணையதளங்களும் ஊடுருவியும், முடக்கமும் செய்யப்பட்டுள்ள தாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பாலும் டாட் இன் டொமைன்களை குறிவைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சி.இ.ஆர்.டி., அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள சர்வர்களைக் கொண்டு ஜுனில் 80 சதவீதமும், அதற்கு பின் 60 சதவீதமும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டாட் இன் டொமைன்களை குறிவைத்து ஜூலையில் 2,380 இந்திய இணையதளங்களும், ஜூலையில் 1,511 இணையதளங்களும், ஜூன் மாதத்திற்கு பின் 2,296 இணையத்தளங்களும் முடக்கப்பட் டுள்ளன.
2005 அல்லது 2004ம் ஆண்டுகளுக்கு பின் மங்கோலியா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளிலேயே இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளதாகவும், இது தொடர்பாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதா கவும் கேஸ்பர்ஸ்கை குளோபல் ரிசர்ச் மற்றும் அனலைசிஸ் லேப் அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் இருந்தே அதிகம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 2009ம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் நடைபெற்ற போதும் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் இணையத்தளத்தை குறிவைத்து இத்தகைய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad