புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2013

நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற சுகா­தாரத் தொண்­டர்கள் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கு­மாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்­பாட்­ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கும்
மகஜர் ஒன்­றினை அனு ப்பி வைத்­துள்­ளனர்.இந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லை யின் பிரதிப் பணிப்­பாளர், கல்வித் தகை­மை­யு­டைய அனை­வ­ருக்கும் 2 வாரத்­திற்குள் நிரந்­தர நிய­ம­னங்கள் வழங்­கப்­படும் எனவும் இதற்­கான அமைச்சின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அறி­வித்­துள்ளார்.
இதே­வேளை, ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் சகல சுகா­தாரத் தொண்­டர்­க­ளுக்கும் நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு கோரி க்­கை­ வி­டுத்­த­துடன் யாழ்.மாவட்ட செய­ல­கத்­திற்குச் சென்று அர­சாங்க அதி­ப­ருக்­கான மக­ஜரைக் கைய­ளித்­த­துடன் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் யாழ். மாவட்ட இணைப்­பா­ள­ருக்­கான மக­ஜ­ரையும் கைய­ளித்­துள்­ள னர்.
அம்­ம­க­ஜரில், யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் தொண்­டர்­க­ளாக சேவை புரியும்
எம்மில் பலர் கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் தொண்­டர்­க­ளாகவே சேவை­யாற்­று­கின்றோம்.
எமது சேவைக் காலத்தின் போது எம்­முடன் சேவை புரிந்த தொண்­டர்­களை சுகா­தார அமைச்சு சுகா­தார சுத்­தி­க­ரிப்­பாளர் பதவிக்கு தரம் 8 தகை­மை­யுடன் உள்­வாங்­கி­யது போல் நாம் அனை­வரும் உள்­வாங்­க ப்­ப­டுவோம் என்ற பெருத்த நம்­பிக்­கை­யு டனும் எதிர்­பார்ப்­பு­டனும் கட­மைக்கு வரு­கின்றோம்.
எமக்கு நாள் ஒன்­றுக்கு வழங்­கப்­படும் வெறும் 175 ரூபா கொடுப்­ப­ன­வுடடனும் பொரு­ளா­தாரக் கஷ்­டத்­துடன் சேவையில் ஈடு­பட்டு வரு­கின்றோம். இக்­கொ­டுப்­ப­ன­வானது எமது போக்­கு­வ­ரத்து, உணவு, சீருடை செல­வுக்கே போதாத நிலையில் நாம் அனை­வரும் வறு­மைக்­கோட்­டிற்கு கீழு ள்ள எமது குடும்­பங்­க­ளி­லி­ருந்தே பணம் பெற்று எமது பொரு­ளா­தாரத் தேவைகள் அனைத்­தையும் ஈடு­செய்து வரு­வதைப் பலரும் அறி­வார்கள்.
இவ் வைத்­தி­ய­சா­லையில் கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பு பல வரு­டங்­க­ளாக லிப்ற் பாவ­னையில் இல்­லாத வேளையில் எமது தொண்­டர்கள் நோயா­ளர்­களை மேல்­மாடி விடு­தி­க­ளி­லி­ருந்து கீழும் கீழி­ருந்து மேல்­மாடி விடு­தி­க­ளுக்கும் காவிச் சென்று சேவை புரிந்­த­மை­யா­னது நோயா­ளர்­களும் அவர்­க ளின் உற­வி­னர்­களும் வைத்­தி­ய ­சாலை ஊழி­யர்­களும் அறிந்த விட­யமே. இத்­த­கைய எமது சேவையை பத்­தி­ரி­கை­களும் பாராட்­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
மேலும் வைத்­தி­ய­சாலை நிரந்­தர சிற்­றூ­ழியர் கட­மைக்கு வரா­த­வேளை பகற்­சே­வையில் உள்ள தொண்­டர்­களை இரவும், இரவுச் சேவையில் உள்ள தொண்­டர்­களை வற்­பு­றுத்தி மறிப்­பது வழமை.
அதன் ­போது வைத்­தி­ய­சாலை நிர்­வா­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு நல்­க­வேண்டும் என்ற காரணத்­திற்­காக எம்மில் பலர் நெருங்­கிய உற­வி­னர்­களின் சுக, துக்க நிகழ்­வு­களில் கூட பங்­கு ­பற்­றாமல் விடு­வ­துண்டு. அத்­து டன் சக­லருக்கும் உள்ள உரி­மை­யான கிழ­மையில் ஒருநாள் விடு­முறை கூட நாம் எடுப்­ப­தில்லை. அது­கூட சில சந்­தர்ப்­பங்­களில் வைத்­தி­ய­சாலை நிர்­வா­கத்­தினால் மறுக்­கப்­ப­டு­வ­துண்டு.
இந்த நிலையில் ஒருநாள் அவ­காச அறி­வித்­த­லுடன் கடந்த 26.10.2013 அன்று நாம் அனை­வரும் நேர்­முகப் பரீட்­சைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தோம். நேர்­முகப் பரீட்­சைக்­காக நாம் சென்ற வேளை அங்கு வெளியி­லி­ருந்து ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட இளைஞர், யுவ­தி­களும் நேர்­முகப் பரீட்­சைக்­காக வருகை தந்­தி­ருந்­ததை அவ­தா­னித்தோம். இங்­கு­கூட எமக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்டு நாம் அழைக்­கப்­ப­டா­மை­யையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது.
மேலும் அங்கு நேர்­முகப் பரீட்­சையில் க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்­சையில் இரண்டு பாடங்­களில் திற­மைச்­சித்­தி­யுடன் 6 பாடங்கள் சித்­தி­யெய்­தியும் கோரப்­ப­டு­வ­தா­கவும் அறிந்தோம்.
இத்தகைமைக் கோரிக்­கையை எம்மைப் புறக்­க­ணித்து வெளியில் இருந்து நேர்­முகப் பரீட்­சைக்கு வந்­தோ­ருக்கு நிய­மனம் வழங்­கு­வ­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவே நாம் எண்­ணு­கிறோம்.
இப்­ப­த­விக்கு க.பொ.த. சதா­ர­ண­தரச் சித்தி கோரப்­பட்­டுள்ள சுகா­தார அமைச்சின் சுற்­ற­றிக்­கை­யுண்டா என்­ப­தையும் அறிய விரும்­பு­கின்றோம். ஆகையினால் இவ்விடயத்தில் தாங்க ளும் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகமும் தலையிட்டு எமது கடந்த கால சேவையினை கவனத்தில் கொண்டு எம் அனைவருக்கும் சுகாதார சுத்திகரிப்பாளர் நியமனம் கிடைக்க ஆவன செய்யும்படியும் தயவுடன் கேட்டுக்கொள்வதுடன் எமக்கு நியமனம் வழங்கப்பட்ட பின்பு மிகுதியாக உள்ள வெற்றிடங்களுக்கு வெளியார் நிய மிக்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேப னையும் இல்லை என்பதனையும் தெரிவித் துக் கொள்கின்றோம் என்றுள்ளது.
 

ad

ad