புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013



          டீக்கடையோ.. போலீஸ் ஸ்டேஷனோ.. கோர்ட்டோ.. இங்கெல்லாம் பொழுது போகவில் லையென்றால்,  ஏதாவது ஒரு நடப்பு விவகாரத்தை சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள் மதுரை வாசிகள்.  சிவகாசி ஜெயலட்சுமி.. செரினா.. பொட்டு சுரேஷ் என ஏதாவது ஒரு விஷயத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். இப்படி பல விவ காரங்கள் விஸ்வரூபம் எடுத்து பின்னர் அடங்கி யிருக்கிறது. ஆனால்.. கடந்த 10
வருடங்களாக சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல்  ‘நான்-ஸ்டாப்’ ஆக பேசப்படும் விஷயம் என்றால் அது மதுரை ஆதீனம்  ‘மேட்டராகத்தான் இருக்கும். 

அப்படி என்ன செய்து விட்டார் மதுரை ஆதீனம்?

தமிழையும் சமயத்தையும் வளர்ப்பதற்காக சைவத் திருமடங்களை நிறுவினார்கள். சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாக திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது மதுரை ஆதீன மடம். இதன் 292-வது குரு மகா சன்னிதானமாக வந்தவர்தான் அருணகிரி எனப்படும் மதுரை ஆதீனம். இதற்கு முந்தைய 291 ஆதீனங்கள் சர்ச்சைக்கு இடம் தராமல் சேவையாற்றினர்.  அருணகிரி என்னும் இயற்பெயர் கொண்ட மதுரை ஆதீனம் மற்ற ஆதீனங்களிலிருந்து மாறுபட்டவர். எந்தவிதத்தில்?




1980-ல் ஆதீன பொறுப்பினை ஏற்றார் அருண கிரி. 2004-ல் தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால், எப்படியோ நெருக்கமான உறவுக்காரன் ஆன சுவாமிநாதனை இளைய ஆதீனம் ஆக்கினார். ஆனால், ஒரு மாதத்திலேயே மடத்துக்குள் எதுவோ நடந்து,  அந்த சுவாமிநாதன் கத்தியைக் கையில் எடுத்து தன்னை மிரட்டியதாக அலறிய ஆதீனம் ""என் னைக் கொலை செய்து மடத்தின் சொத்துக்களை அபகரிக்க சதித்திட்டம் தீட்டிவிட்டான்..'' என்று குற்றம் சுமத்தி சுவாமிநாதனை மடத்திலிருந்து விரட்டினார். ஆனாலும், அந்த சுவாமிநாதன் பழ.நெடுமாறனுக்கும் உறவினர் என்பதால் ‘பேச்சு வார்த்தை’ நடந்து, செட்டில் பண்ண வேண்டிய நிலைக்கு ஆளானார் ஆதீனம். இன்று நித்தி விவகா ரம் வரையிலும் இப்படித்தான் சர்ச்சையும் சங்கட மும் அவரைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.  

மதுரையில் 200-க்கும் மேற்பட்ட கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறது மதுரை ஆதீன மடம். இதில் டவுன்ஹால் ரோட்டில் உள்ள பீடா கடை விவகாரம்தான் இப்போது ஆதீனத்தை இம்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆதீனத் தின் உதவியாளரான வைஷ்ணவி தனக்கு ரூ.2 லட்சமும், ஆதீனத்துக்கு ரூ.5 லட்சமும் வாங்கிக் கொண்டு பீடா கடை சகோதரர்களில் இளை யவர் சுந்தருக்கு பெயர் மாற்றம் செய்து விட்ட தாக  புகார் எழுந்திருக்கிறது. இந்தச் சிக்கலில் இருந்து விடுபடத் துடிக்கும் வைஷ்ணவி, முன் ஜாமீன் பெற்று, பீடா கடை சகோதரர்களில் மூத்தவர் பூபதி மற்றும் அவரது மாமனார் தேவராஜன் மீது, கர்ப்பிணியான தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பதிலுக்கு புகார் கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பூபதி, ஆதீனத்தின் ஆசியோடு தனக்கு எதிராக வைஷ்ணவி இந்த அளவுக்கு போய்விட்டாரே என்று, ஏற்கனவே ஆதீனத்துக்கு எதிராக இருக்கும் இந்து அமைப்புக்களிடம் போய் முறையிட்டிருக்கிறார். 

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் சொல்வதைக் கேட்போம்.

""மதுரை ஆதீன மடத்துக்கு 750 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. மாதம் ஒன்றுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வாடகை வருமானம் வருகிறது. ஆனால், கடந்த 33 வரு டங்களாக ஆதீன சிம்மாசனத்தில் அமர்ந்திருக் கும் அருணகிரி அன்னதானம் அளிக்கவோ, தமிழ் வளர்ச்சிக்கோ எதுவுமே செய்ததில்லை. மடத்தின் வருமானத்தை தனக்கு வேண்டிய பெண்களுக்கு மட்டுமே தாராளமாக செல வழித்துக் கொண்டிருக்கிறார். வைஷ்ணவிக்கும், அவரது தங்கைக்கும் ரூ.10 லட்சத்தைக் கொடுத் ததற்கு ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. மடத்துறவிக்கு எதற்கு பெண்கள் சகவாசம்? உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு, திருமணமான வைஷ்ணவியை மடத்துக்குள் வைத்திருப்பதால், மடத்தின் புனிதம் கெட்டு விட்டது. நித்தியிடம் சிக்கி மீண்ட ஆதீனம் மீண்டும் வைஷ்ணவியிடம் சிக்கி மடத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார். ஆதீன மடத்துக் குள் நடப்பதெல்லாம் மர்மமாகவே இருக்கு.. இதை சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? மடத்தை அரசு கைப்பற்ற வேண்டும்'' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். ஆதீனத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரிடமே கேட்டோம். 

""என் மீதும் மடத்தின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பொய்யானவை. மடத்தின் கணக்கு வழக்குகள் அத்தனையும் தணிக்கைக்கு உட்பட்டவை. இதில், தனி நபரோ அரசாங்கமோ தலையிட முடியாது. இவர்களெல்லாம் என்னை எதிர்த்து தங்களை விளம் பரப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். நான் முற்றும் துறந்தவன். எந்தவித  ஆசாபாசங்களுக்கும் இடம் தராதவன். வைஷ்ணவி என்னுடைய உதவியாளர்தான். ஆனால், அவர் மடத்தில் தங்கவில்லை. தனி வீடு பிடித்து வேறொரு இடத்தில்தான் தங்குகிறார்'' என்றார். 

ad

ad