புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2013

தமிழர் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரானது ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்: அர்ஜூன் சம்பத்
இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழர் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும்,
வரலாற்றுக்கும் முற்றிலும் எதிரானது ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆகும். மேலும் ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்தை வைத்தே கணக்கிடப்பட வேண்டும்.

ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவில் 12 மணிக்கு பின் உதயமாகிறது எனக்கூறி டிசம்பர் 31–ந் தேதி இரவு 12 மணிக்கு காட்டுக்கூச்சல் போடுவதும், மதுவிருந்து நடத்துவது, ஆபாச உடையணிந்து ஆட்டம் போடுவதும், பொதுவீதிகளில், பூங்காக்கள், கடற்கரை ஆகிய பகுதிகளில் மதுப்பாட்டிலை உடைத்து பீரை பீய்ச்சி அடிப்பதும், பெண்களை கேலி செய்வது, வாகனங்களில் சைலன்சரை கழற்றி விட்டு அதிவேகமாக செல்வது, நட்சத்திர விடுதிகளில் சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது என முழுக்க முழுக்க ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் எனும் பெயரில் வக்கிரச் செயல்களே நடக்கின்றன.
ஆங்கிலேய கிறிஸ்தவர் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ததன் காரணமாக நாம் ஆங்கிலேய காலண்டரை பின்பற்றுகிறோம். இந்த மாயையில் மூழ்கிய இந்துத்தமிழர்கள் சிலர் அகால வேளையில் நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்திர விரோதமாக திருக்கோயில் நடைதிறந்து பூஜை செய்வது போன்ற பாவ காரியங்களை செய்கிறார்கள்.
கடந்த காலங்களில் இத்தகைய வக்கிர கொண்டாட்டங்களால் நட்சத்திர விடுதி ஒன்றில் விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிர் இழந்த சம்பவங்கள் உண்டு. மேலும் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டு வன்முறை வெடிக்கின்றது.
எனவே தமிழக காவல்துறை ஆபாச வக்கிர ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகத்தில் உள்ள திருக்கோவில்களை அகால வேளையில் சாஸ்திர விரோதமாக நடைதிறக்க கூடாது என உத்திரவு பிறப்பிக்க வேண்டும். அனைவரும் ஆங்கில மோகத்திலிருந்து விடுபட்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார் அனுப்பப்படுகிறது. சித்திரையே புத்தாண்டு என்கிற பிரச்சாரத்தை இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ad

ad