புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013


தென்சூடனில் மனிதப்புதைகுழி.கடும் சண்டை 
2011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது.
டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை ஜனாதிபதி ரீக் மசூரை பதவியிலிருந்து
அகற்றினார்.
இதையடுத்து ஜனாதிபதியின் படைக்கும் ரீக் மசூரின் புரட்சிப்படைக்கும் இடையே அங்கு தற்போது கடுமையான உள்நாட்டு போர் நடக்கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் கொடூரமான இனப்படுகொலைகளும், கற்பழிப்புகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இதில் புரட்சிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க போர் நகரத்தில் சண்டை தீவிரம் அடைந்துள்ளது. இதில் சில பகுதிகளை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த சண்டையில் பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, போராளிகள் வசமுள்ள பெண்டியூ நகரில் மிகப்பெரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மேலும் இரண்டு மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த மனித புதைகுழியிலிருந்து 34 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிறை பேர் இங்கு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad