புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013




த்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி ஜெயந்தி நடராஜனின் திடீர் ராஜி னாமா, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. தன்னை வந்து சந்திக்குமாறு கடந்த 19-ந் தேதி ஜெயந்தியை அழைத் தார் ராகுல்காந்தி. அதன் பேரில் ராகுலை ஜெயந்தி நடராஜன் சந்திக்க, "கட்சி பணிக்கு செல்ல வேண்டி
யிருப்பதால் அமைச்சர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமரிடம் கடிதம் கொடுங்கள்' என கட்டளையிட்டார் ராகுல். அதிர்ச்சியடைந்த ஜெயந்தி நடராஜன், பிரதமரை சந்தித்து அப்படியே கடி தம் கொடுத்தார். அவரது இலாகாவை கூடுதல் பொ றுப்பாக தனக்கு வேண்டப் பட்ட பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் ஒப்படைக்க ஏற் பாடு செய்தார்  ராகுல்.

டெல்லி வட்டா ரங்களில், ஜெயந்தி ராஜினாமா குறித்து விசாரித்தபோது, ""மத்திய மின்துறை சம்பந்தப்பட்ட 4 லட்சம் கோடி மதிப் பிலான 70 மின் திட்டங்கள் சுற்றுச் சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித் துள்ளன. ஆனால் இதில் விரைந்து முடிவெடுக்கா மல் கிடப்பில் போட்டு விட்டார் ஜெயந்தி நடராஜன். அதே போல, முதலீடு களுக்கான கேபினெட் கமிட்டியின் வழியாக அனுப்பப்பட்டுள்ள சுரங்கம், துறைமுக விரிவாக்கம், ரியல் எஸ்டேட் தொழில், கன்டைனர் காரிடார்  உள் ளிட்ட 200 திட்டங்களுக்கான ஃபைல் கள் சுற்றுச்சூழல் கிளியரன்ஸ் கிடைக் காமல் வரிசையில் காத்துக்கிடக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். 



கிளியரன்ஸ் கொடுக்கப்படாமல் இருப்பது குறித்து கேபி னெட் செக்ரட் டரி அஜீத் சேத் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய நிலையிலும் முறை யான பதில் தரப் படவில்லை. அதே சமயம், சம்பந்தப் பட்ட தொழில் நிறு வனங்களோடு ரகசியமாக பேசியதும் அது தொடர்பான கடுமையான வலியுறுத்தல்களும்தான் இதன் பின்னணியில் இருந்தன. இது குறித்து சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் ராகுல் காந்தியிடமும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் தங்களின் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்திருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்பான நீர் ஆதாரம் மற் றும் மாசுபட்ட பகுதிகளைக் கண்டறியவும் அதற் கான தீர்வையும் ஆராய்வதற்காக அமைக் கப்பட்ட கஸ்தூரிரங்கன் கமிட்டி தனது அறிக்கையை  ஜெயந்தியின் அமைச்சகத் திடம் கடந்த ஏப்ரலில் ஒப்படைத்தது. இதன் பரிந்துரையில், கடல் மட்டத்தி லிருந்து 4000 அடிக்கு மேலே கட்டிடங் களுக்கு தடை, நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள் அமைக்கக்கூடாது, மணல் மற்றும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்கப் பட வேண்டும், ரெட் கேட்டகிரியிலுள்ள ஆபத்தான தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து, சுரங்கத் தொழில்களுக்கு தடை ஆகியவை மிக முக்கியமான அம்சங்கள். அந்த கமிட்டியின் அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் சமீபத்தில் சமர்ப்பித்துவிட்டார் ஜெயந்தி நடராஜன். 

அதனை வெளியிட்ட பசுமைத் தீர்ப்பாயம், கமிட்டியின் பரிந்துரைகளை மாநிலங்கள் கடுமையாக பின்பற்ற வேண் டும் என உத்தரவிட்டது. அந்த பரிந்துரை கள் கேரள மாநிலத்தைத் தான் கடுமை யாகப் பாதித்தது. 

ஒரு தமிழச்சியின் (ஜெயந்தி நட ராஜன்) நடவடிக்கையால் கேரளம் பாதிக்கப்படுவதா? என கடும் கோபம் கொண்டனர். கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் மலையாள தொழிலதிபர்களும் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடமும் சோனியாவின் தனிச் செயலர் ஜார்ஜிடமும் இது குறித்து முறையிட்டனர். இவைகள் எல்லாம் சேர்ந்துதான் ஜெயந்தியை காவு வாங்கிவிட்டது''’ என்றும் ஒருதரப்பு சுட்டிக்காட்டுகிறது. 

ராஜினாமா சர்ச்சை குறித்து டெல்லியிலிருந்த ஜெயந்தி நடராஜனை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், ""சுற்றுச்சூழல் தொடர்பான க்ளியரன்ஸ்களில் 92 சதவீதம் மாநில அரசின்  கட்டுப்பாட்டில் இருப்பவை. 8 சதவீதம்தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வரும். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் க்ளியரன்ஸுக்காக  எந்த ஃபைலும் தேங்க வில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு வருகிற எந்த ஒரு திட்டத்தையும் நான் முடக்கி வைக்கவில்லை. என் துறையில் நேர்மையாக வும் உண்மையாகவும் எனது கடமையை செய்திருக்கிறேன். மற்றபடி என் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. எந்த பேர விவகாரத்திலும் நான் ஈடுபட வில்லை'' என்கிறார் சூடாக. 

அவரிடம் ராகுல்காந்தியின் பேச்சைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டபோது, ""மாநில அரசின் சுற்றுச்சூழலைத்தான் அவர் குறிப்பிட்டார்''’ என்றார் சமாளிப்பாக ஜெயந்தி  நடராஜன். நாமும் விடாமல் கஸ்தூரிரங்கன் கமிட்டி பரிந்துரைகளை பற்றி கேள்வி எழுப்பியபோது, ""கமிட்டியின் அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்தது நான்தான். மேற்குத் தொடர்ச்சி மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அங்கு சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது என் கடமை என்பதால் அதைச் செய்தேன். இது கேரளாவுக்கு பாதிப்பு என்று கிளர்ச்சிகள் நடக்கிறது. மற்றபடி இதில் மறைந்துள்ள அரசியல் எனக்குத் தெரியவே தெரியாது'' என்றவரிடம், "ராகுல்தான் உங்களை ராஜினாமா செய்யச் சொன்னாரா?' என்றோம். ஒரு நிமிடம் அமைதியாக  இருந்தவர், பிறகு குரலை உயர்த்தி ""ஆமாம்... ராகுல் என்னை அழைத்தது உண்மைதான். கேரள மாநில விவகாரங்கள் குறித்து என்னிடம் விசாரித்தார். நான் விரிவான விளக்கம் தந்தேன். ஒருகட்டத்தில், "கட்சிப்பணிக்கு உங்களை பயன்படுத்திக் கொள்ள விருக்கிறேன்; அதனால் ராஜி னாமா கடிதம் கொடுங்கள்' என்றார். என் மனசு சுத்தமாக உள்ளது. அதனால் உடனடியாக ராஜினாமா கடிதத்தை அனுப் பினேன்'' என்றார் ஜெயந்தி நடராஜன். 

ராகுல் வட்டார மோ, ""குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே பதவி நீக்கம் நடந்தது'' என்றது உறுதியாக.

ad

ad