புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2013

நெடுந்தீவில் ஈ.பி.டி.பி.யின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் திடீர் சோதனை! சட்டவிரோத ஆயுதங்கள் மீட்ப
நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிமால் பெரேரா தெரிவித்தார்.
சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
அந்த கால எல்லை முடிவடைந்த நிலையிலேயே ஈ.பி.டி.பியினர், அவர்கள் சார்ந்தோரை இலக்கு வைத்து தேடுதல் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சியன் அண்மையில் தீவகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சந்தேகத்தின் பேரில் ஈ.பி.டி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான க.கமலேந்திரன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சட்டவிரோதமான ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றை கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்குள் பொலிஸாரிடம் ஒப்படைத்துவிடுமாறு கால எல்லை கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றுக் காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டவிரோத ஆயுதங்கள் எவையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதலளித்த யாழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிமால் பெரேரா, அவ்வாறான சட்டவிரோத ஆயுதங்கள் எவையும் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். எனினும் பொலிஸாரின் தேடுதல் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

ad

ad