புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2013


           ""ஹலோ தலைவரே... அ.தி.மு.க பொதுக்குழு, தி.மு.க பொதுக் குழுன்னு எம்.பி. தேர்தலுக்கான ஹீட் அதிகமாகிக்கொண்டே இருக்குது.''


""குளிர்ச்சியான ஏற்காடு மலையே இடைத்தேர்தலால் அனல் பறந்தது. நாடாளு மன்றத் தேர்தல்னா எரிமலையாத்தானே தேர்தல் களம் இருக்கும்.''

""டிசம்பர் 19-ந் தேதி ஜெயலலிதா கூட்டுற அ.தி. மு.க செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் எம்.பி. தேர்தல் பற்றித்தான் விவா திக்கப்படுமாம். புதன் கிழமையன்னைக்கு எம்.பி.க் கள் கூட்டம் நடந்தது. அதை யடுத்துதான் பொதுக்குழு அறிவிப்பு வெளியானது. தேர்தல் வேலைகளை எப்படி செய்யணும்னு கட்சியினருக்கு இதில் வழிகாட்டப் படும்னு சொல்றாங்க. மூன்றாவது அணி பற்றிய வெளிப்படையான அறிவிப்பு வருமா, 40 தொகுதிகளிலும் போட்டிங்கிற அறிவிப்பு மறுபடியும் அழுத்தமா வெளியாகுமான்னு அ.தி.மு.க.வினரைவிட அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும்தான் ரொம்பவும் எதிர்பார்த்துக் கிட்டிருக்காங்க.'' 

""தி.மு.க. பொதுக்குழுவிலும் எம்.பி. தேர்தல் பற்றிய டிஸ்கஷன்தானே நடக்கும்?''

""இப்பவே அந்தக் கட்சியின் மேல்மட்டத்தில் அதுதான் நடந்துக்கிட்டிருக்குது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வர்றாரு கலைஞர். ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மூலமாக பொதுவாக் கெடுப்பு நடத்த இந்திய நாடாளுமன்றத்தில் தீர் மானம் நிறைவேற்றணும்னு நெருக்கடியும் கொடுக் கிறார். அவர் எப்பவுமே ஒரு முடிவை எடுத்துட் டுத்தான் அதற்கேற்ப மெல்ல மெல்ல காய் நகர்த்துவார்ங்கிறது அர சியல் தெரிந்த எல்லோ ருக்கும் தெரியும். அதனால, இப்ப அவர் எடுத்திருக் கும் முடிவென்ன, அதற்கான மூவ்கள் என் னென்னன்னு அரசியல் வட்டாரத்தில் ரொம்பவே எதிர்பார்க்கப்படுது.''

""அறிவாலயம் வட்டா ரத்தில் என்ன சொல்றாங்க?''

""கலைஞர்கிட்டே மு.க. ஸ்டாலின் இது சம்பந்தமா பேசும் போதெல்லாம், 5 சீட்டுக்கு காங்கிரஸ் ஒத்துக்கொண்டால் கூட்டணியில் சேர்க்கலாம். 15 சீட்டு 20 சீட்டுன்னு டிமாண்ட் பண்ணி, தி.மு.க. போட்டியிட்டு ஜெயிக்கக்கூடிய தொகுதிகளையெல்லாம் அவங்க கிட்டே கொடுத்துத் தோத்துப்போனாங்கன்னா அது நம்ம கட்சிக்குத்தான் பேரிழப்பு. டிமாண்ட் பண்ணாமல் சீட் வாங்கிக்கிட்டா அவங்க நம்ம கூட்டணியில் இருக்கட்டும். இல்லைன்னா வேண்டாம்னு சொல்றாராம். பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்கலாம்ங்கிற எண்ணமும் ஸ்டாலின் தரப்பிடம் இருக்குது. கலைஞருக்கும் காங்கிரஸ் மேலே செமகோபம் இருக்குது. 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 சீட்டுகளை வாங்கிப் போட்டியிட்டு, தி.மு.க. ஜெயிக்க வேண்டிய இடங்களையெல்லாம் காங்கிரஸ் காலி பண்ணிடிச்சிங்கிறது ஒரு கோபம். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான தன்னோட கோரிக்கைகளை நிறை வேற்றுவதில் காங்கிரஸ் அலட்சியம் காட்டுதுங்கிறது கலைஞரோட இரண்டாவது கோபம். ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியும் காங்கிரஸ் தரப்பி லிருந்து எந்த பதிலும் வரலைங்கிறது அடுத்த கோபம். அதனால அவருக்கும் காங்கிரசுக்கு எம்.பி. தேர்தலில் அதிக சீட்டு கொடுக்க விருப்பமில்லை. டிமாண்ட் பண்ணாமல் வந்தால் கூட்டணியா இருப்போம்ங்கிறது கலைஞரோட நிலை.''

""அதற்கு ஒத்து வரலைன்னா பா.ஜ.க.வோடு தி.மு.க. கை கோர்க்குமா?'' 



""இன்னொரு கட்சியை தி.மு.க கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடக் கூடாதுங்கிறதாலதான் குறைந்த சீட்டுகளில் காங்கிரசை தக்க வைக்கணும்னு கலைஞர் நினைக்கிறாராம். பா.ஜ.க.வோடு கைகோர்த்தால் சிறுபான்மை சமுதாயத்து வாக்குகளையும் தலித் மக்களின் வாக்குகளையும் இழக்க வேண்டியிருக்கும்னு, தமிழகத்தில் வாக்குவங்கி இல்லாத பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதற்குப் பதில் காங்கிரசோடு கூட்டணி வைப்பதே பெட்டர்னு கனிமொழி தரப்பு நினைக்குது. இதைப் பற்றி கலைஞர்கிட்டேயும் கனிமொழி சொல்லி யிருக்காராம். குறைந்த சீட்டுக்கு காங்கிரஸ் ஒத்துவரலைன்னா, அதை கழட்டிவிட்டுட்டு தே.மு.தி.க.வை உள்ளே கொண்டு வரலாம்னும் யோசனை ஓடிக்கிட்டிருக்குது. தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி  தொடர்பா சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் பிரேமலதாகிட்டே கனிமொழி பேசுறாராம்.'' 

""தன்னோட தலைமையை ஏற்கும் கட்சிகளோடுதான் கூட்டணின்னு விஜயகாந்த் சொல்லியிருக்காரே.. அவரோட தலைமையில் கூட்டணி சேர தி.மு.க தயாரா இருக்குதா என்ன?''

""டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி விஜயகாந்த் இப்படி சொன்னது தேசிய கட்சிகளை மனசிலே வச்சுத்தான்னு தி.மு.க நினைக்குது. தே.மு.தி.க வட்டாரத்தில் கூட்டணி மனநிலை என்னன்னு விசாரித்தேன். தமிழ்நாட்டில் வலுவான மூணாவது அணியை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க. சைடிலிருந்து வெங்கையா நாயுடு, இல.கணேசன் இருவரும் தே.மு.தி.க.கிட்டே பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா, காங்கிரசிலிருந்து சமீபத்தில் யாரும் விஜயகாந்த்தை காண்டாக்ட் பண்ணலைன்னு சொல்றாங்க. ஏற்கனவே ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் போன்ற மாநிலப் பிரமுகர்கள் பேசியதோடு சரின்னு சொல்றாங்க. ஆனா, பா.ஜ.க.வும் காங்கிரசும் மாறி மாறி தன்னிடம் பேசுவதுபோலவும், தன் தலைமையிலான கூட்டணியை ஏற்கும் கட்சியோடுதான் கூட்டணின்னு விஜயகாந்த் சொல்லிக்கிட்டிருப்பதாகவும் தே.மு.தி.க நிர்வாகிகளே சொல்றாங்க.''
""சங்கரராமன் கொலை வழக்கு பற்றி மாநில அரசுத் தரப்பிலும் சட்டத்துறையினர் தரப்பிலும் என்ன சொல்றாங்க?''

""புதுச்சேரி கோர்ட்டில் அரசு வக்கீலா ஆஜரான தேவதாஸ், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி.க்கு ஒரு லெட்டர் எழுதியிருக்காரு. அதில், சங்கரராமன் கேஸ் அப்பீலுக்கு தகுதியான கேஸ்னு 7 பாயிண்ட்டுகளை சுட்டிக்காட்டி யிருக்காரு. 1. அப்ரூவர் ரவிசுப்ரமணியம் பல்டி சாட்சியானதால அது சம்பந்தமா தனி வழக்குத் தொடுத்து விசாரிக்கணும். ஆனா, அவரை வழக்கிலிருந்தே விடுதலை செஞ்சிருக்காரு நீதிபதி முருகன். இந்திய சட்ட வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லையாம். மறுவிசாரணை நடத்த இந்த பாயிண்ட்டே போதும். 2.சங்கரராமனுக்கும் ஜெயேந்திரருக்கும் முன்விரோதம் இல்லைன்னு நீதிபதி தன் தீர்ப்பில் சொல்லியிருக்காரு. ஆனா, சோமசேகர கனபாடிகள்ங்கிற பேரில் ஜெயேந்திரருக்கு எதிரா எழுதப்பட்ட லெட்டர்களெல்லாம் சங்கரராமன் தன் கைப்பட எழுதியதுதான்னு கையெழுத்து நிபுணர்கள் அளித்த சாட்சியத்தை நீதிபதி கவனத்தில் எடுத்துக் கலை. 3.இந்த வழக்கில் பல்டி சாட்சியான பலரும் ஏற் கனவே ஒரு நீதிபதி முன்பு 164 ஸ்டேண்மெண்ட் கொடுத்தவர்கள்தான். அதை அப்படியே நீதிபதி முருகன் நிராகரிச் சிருக்காரு. 4.காஞ்சி மாஜிஸ்டிரேட் முன்பாக நடந்த அணிவகுப்பில் கொலையாளிகளை  சங்கரராமன் குடும்பத்தினர் அடையாளம் காட்டியதையும் அவர் கவனத்தில் எடுத் துக்கலை.''

""மற்ற பாயிண்ட்டுகள்?''


""பாயிண்ட் 5. கொலைநடந்தபோது சிறையில் இருந்த ஒருவன், ஜெயேந்திரரின் தூண்டுதலால்தான் போலி குற்றவாளியாக சரணடைந்தான் என அரசுத்தரப்பு நிரூபித் திருப்பதும் நீதிபதியின் தீர்ப்பில் இடம் பெறலை. 6. ஜாமீன் கொடுத்தபோது தெரிவிக்கப் பட்ட கருத்துகளை விசாரணை நீதிமன்றம் அப்படியே எடுத்துக்கக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருந்தும், ஜெயேந்திரர் கொலைக்கான சதித்திட்டத்தை தீட்டினாருங் கிறதுக்கு முகாந்திரம் இல்லைன்னு அப்படியே எடுத்துக்கொண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்குது. 7. கொலைக்காக 5 லட்ச ரூபாய் மடத்திலிருந்து கொடுக்கப்பட்டிருப்பதையும் அதில் 1 லட்சத்தை ஜெயேந்திரரே கொடுத்திருக்கிறார்னு அரசுத் தரப்பு நிரூபித்த ஆதாரங்களும் ஏற்கப்படலை. இதெல்லாம் அந்த லெட்டரில் சொல்லப் பட்டிருக்குது. அது அப்படியே சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி.க்குப்போக, அவர் அதை சி.எம். அலு வலகத்துக்கு அனுப்பிட்டாரு.''

""அங்கிருந்து ஏதாவது தகவல் வந்ததா?''

""காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. வீரமணி கிட்டேயே பேசினேங்க தலைவரே.. அப்பீலுக்கான  அத்தனை அம்சங்களும் உள்ள இந்த வழக்கில் மேல் நடவடிக்கைகளை தொடங்கு மாறு மேலிடத்திலிருந்து அனுமதி வந்திடிச்சாம். அதனால சங்கரராமன் கேஸில் அப்பீலுக்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடங்கப் படும்னு சொன்னார். அப்பீல் விஷயத்தில் புதுச்சேரி அரசுக்குத்தான் அதிகாரம் இருக்குது. அதனால அங்கே என்ன நடக்கும்ங்கிற எதிர்பார்ப்பும் இருக்கிற நேரத்தில், ஜெயேந்திரரை எப்படியாவது காப்பாத்தணும்னு அவருக்கு வேண்டியவங்க இங்கேயும் புதுச் சேரியிலும் பலமா லாபி பண்ணிக் கிட்டிருக்காங்க.''

""மணல் லாபி எப்படியிருக்குது?''

""ஆறுமுகச்சாமியோட பிசினஸ் பார்ட்னரான பழனிச்சாமி காஞ்சி மாவட்டத்தில் சட் டத்திற்குப் புறம்பா நடத்திக் கிட்டிருந்த 2 மணல் யார்டுகளை ஜெ. அரசு சீல் வைத்தது. இந்த யார்டுகளை ஏலம் விடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்துக்கிட்டி ருக்குது. பொதுப்பணித் துறையில் இருக்கிற நேர்மையான அதிகாரிகளோ, சட்டவிரோதமான யார்டுகளை சீல்வைத்தது சம்பந்தமா ஹைகோர்ட்டிலும் அரசு தெரிவித் திருக்குது. அப்படியிருக்கும்போது, யார்டை வீடியோ எடுத்து அதைக் கோர்ட்டில் சமர்ப்பித்து, கோர்ட்டின் அனுமதி பெற்றுத்தான் ஏலம் விடணும். இவங்களே தன்னிச்சையா விட்டால் அது கேஸைத்தான் பாதிக்கும். யார்டில் உள்ள மண லெல்லாம் விற்பனையான பிறகு, பழனிச்சாமி தரப்பு நாங்க அப்படி எந்த யார்டும் நடத்தலைன்னு சொன்னா, அரசாங்கத்துக்கிட்டே ஆதாரமா காட்டுறதுக்கு என்ன இருக்குது? பழனிச்சாமியை காப்பாத்துறதுக் காகத்தான் எப்படியாவது ஏலத்தை நடத்தணும்னு அரசாங்கம் துடிக்கு தோன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்றாங்க.''

""ஓ''…

""மணல் சம்பந்தமா இன்னொரு தகவலை நான் சொல்றேன்.. பாண்டிச்சேரியை சேர்ந்த கோகுலகண்ணன்ங்கிறவர் ஆர்.ஜி.என்.எஸ் எண்டர்  பிரைசஸ் சார்பா சிலிக்கான் மணல் அள்ளுவதற்கு லைசென்ஸ் எடுத்துக் கிட்டு, தமிழ்நாட்டின் பல பகுதி களிலிருந்து ஆற்றுமணலைத் திருட்டுத் தனமாக வாங்கி கேரளாவுக்கு அனுப்பி பிஸினஸ் செஞ்சிக்கிட்டிருக்காரு. இதை பல அதிகாரிகள் கண்டுக்காம லேயே இருந்தாங்க.. கேரளா செல்லும் வழியில் உள்ள வாளையாறு செக் போஸ்ட்டில் கெடுபிடி அதிகமா இருந்ததால ஊட்டி மலை வழியா கேரளாவின் வயநாட்டுக்கு மணல் லாரிகளை அனுப்பிக்கிட்டிருந்தார். இரண்டாவது ட்ரிப் லோடு போகும்போது ஊட்டி கலெக்டரா  இருந்த அர்ச்சனா பட்நாயக் அந்த லாரிகளை மடக்கிட்டார். கோகுலகண்ணன் உடனே மைன்ஸிலும் பொ.ப.துவிலும் உள்ள தனக்கு வேண்டிய அதிகாரிகள் கிட்டே பேச, அடுத்த சில நாட்களில் அர்ச்சனா பட்நாயக் கோவைக்கு மாற்றப்பட்டார். இப்ப தமிழ்நாட்டு மணல் கேரளாவுக்குப் போக ரூட் க்ளியராகிவிட்டது.''   

 லாஸ்ட் புல்லட்!

திருச்சியில் தொழிலதிபர் துரைராஜ், வைரவியாபாரி தங்கவேல், அவரது மகன், மகள் ஆகியோரைக் கொலை செய்த கராத்தே சாமியார் கண்ணன் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி முழுமை யாகக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது. கண்ணனுக்குத் துணையாக இருந்த வைரவியாபாரி யின் மனைவி யமுனாவை அவரது வீட்டிற்கு அழைத்துவந்து கொலை பற்றிய விசாரணை நடத்திய துடன் அவரது கைரேகைகளையும் பதிவு செய்திருக் கிறார்கள். எனினும், இதே சி.பி.சி.ஐ.டியால் விசாரிக்கப்படும் ராம ஜெயம் கொலைவழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

அடுத்தடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்ட பா.ம.க.வின் ஜெ.குருவை புதனன்று உயர்நீதிமன்றம் விடு வித்து தீர்ப்பளிக்க, புதிய என்.எஸ்.ஏ ஏதுமின்றி புழல் சிறையி லிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவரை அன்புமணி வரவேற்றார். ஏற்காடு இடைத்தேர்தலில் பா.ம.க.வினர் மீதான வழக்குகளைப் பற்றி தி.மு.க பிரச்சாரம் செய்தது வன்னிய சமுதாயத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், மீண்டும்  என்.எஸ்.ஏ. போட்டால் அது அரசியல்ரீதியாக அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டின் விளைவுதான் குருவின் விடுதலை என்கிறது கோட்டைத் தரப்பு.

மூப்பனார், சிவாஜி, திருநாவுக்கரசு ஆகியோரின் அரசியல் ஆலோசகராக இருந்த தோட்டம் பாஸ்கரன், 1996 முதல் 2001 வரை ஜெ.வின் ஆலோசகராக போயஸ்கார்டனில் இருந்தவர். (பெயர்க்காரணம் இதுதான்). தேர்தல் களங்களைத் துல்லியமாகக் கணித்து ஜெ.விடம் பெயர் வாங்கியவர். எனினும், 2001-ல் சுதாகரன் மீது பாய்ந்த போதைப் பொருள் வழக்கு பாஸ்கரன் மீதும் பாய்ந்தது. உள்ளுக்குள்ளேயே உள்ளவர்களின் சதியால் சிக்கவைக்கப்பட்ட பாஸ்கரன் சிறைவாசம் அனுபவித்து ஜாமீனில் வெளியே வந்தார். மல்டிபிள் மைலோமா என்கிற கேன்சரால் பாதிக்கப்பட்டு, வழக்கையும் 12 ஆண்டுகளாக எதிர்கொண்டு அண்மையில்தான் விடுதலையானார். எனினும் அவரது உடலும் உள்ளமும் தளர்ந்து, நோய் முற்றி டிசம்பர் 2-ந் தேதி இரவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அரசியல்பிரமுகர்கள், பொருளாதார நிபுணர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 உஷ்!

கூடல்நகர் 2 கல்லூரிகளில் 3 இடங்கள், செட்டிநாட்டின் ஒரு கல்லூரி யில் ஒரு இடம் என அன்னைத் தமிழை அள்ளித்தர, ஆதிதிராவிடர்(அ) பிரிவின ருக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனாலும், "எங்களுக்கு ஏழரை, பழனியப் பனுக்கு ஏழரை'’என கல்லூரியில் பேச.. நால்வரின் வாழ்விலும் மண். ஆனாலும், 3-ல் 1 இடத்துக்கு உரிய சமூகத்தவரையும் மற்ற 2 இடங் களில் பொதுவான ஆதி திராவிடர் பிரிவினரையும் (ஏழரை+ஏழரை) வாங்கிக்கொண்டு, அமர்த்தி யுள்ளனர். இந்த ஏழரைக

ad

ad