புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013



             டந்த ஐம்பதாண்டு காலம் தமிழகத்தில் புகழ் பெற்ற  அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது காரில் பறக்கும் தே.மு.தி.க. கொடியைக் காணோம். அவரது தொலைபேசி முன்னெப்போதும்
இல்லாத அளவில் பிஸியாகிவிட்டது. சோனியா ஆலோசகர் அகமது படேல், நரேந்திர மோடியின் செயலாளரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. தலைவர்கள், வன்னியர் சமூக பிரமுகர்கள்... என மாறி, மாறி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு தனது வழக்கமான பாணியில் "வாழ்க வள முடன்' என்கிற எம்.ஜி.ஆரின் வாழ்த்துச் சொல்லோடு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

அவரை சந்தித்தபோது...

அரசியலில் உங்களைவிட சீனியரான கலைஞர், பேராசிரியர், பொன்னய்யன் போன்றோர் நிகழ்கால அரசியலில் செயல் படும்போது நீங்கள் மட்டும் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தது ஏன்?


பண்ருட்டியார் : அவர்கள் எல்லாம் அரசியலில் தொடர்ந்து செயல்படுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயம். பொதுவாக மறைவு அல்லது தோல்வி ஆகியவைகள்தான்  ஒரு அரசியல்வாதிக்கு ஓய்வைத் தரும். அது இரண்டும் இல்லாமல் ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட முதல் அரசியல் தலைவர் நான்தான். இது சுயமாக நான் எடுத்த முடிவு. அதற்கு மிக முக்கிய மான காரணம் எனது உடல்நிலைதான்.

உடல்நிலை சரியில் லாத அரசியல் தலைவர்கள் எல்லாம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு செயல்படாமல் இருப்பார்கள். எம்.ஜி.ஆர். கூட அப்படி செயல்படாமல் இருந்திருக் கிறார். நீங்கள் ஓய்வு என்று அறிவித்திருக்கிற நேரம் பாராளுமன்றத் தேர்தல் வரக்கூடிய நேரம். ஓய்வைச் சொல்ல இந்த நேரத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?


பண்ருட்டியார் : எனக்கு 77 வயதாகிவிட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.  அவைத்தலைவர் பதவி, ஆலந்தூர் எம்.எல்.ஏ. பதவி இரண்டும் நிறைய டென்ஷன்களை தந்து கொண்டிருந்தது. சிறிது காலம் எனது மகன் சம் பத், ஆலந்தூர் தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து செயல்பட்டுக்கொண்டிருந் தார். இப்போது அவரும் இல்லை. அவர் தனது சொந்த வேலைகளைப் பார்க்க அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். என் னால் எதுவும் செய்ய முடியவில்லை. கட்சி அவைத்தலைவர் பதவிக் குரிய வேலைகளினால் ஏற்பட்ட டென்ஷன் களையும் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் ஓய்வு பெற முடிவு செய் தேன். ஓய்வு பெற்ற பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்தால் எனக்கென்ன, சட்டமன்ற தேர்தல் வந்தால் எனக்கென்ன?



நீங்கள் எம்.ஜி.ஆருடன் இருந்தபோது எத்தனையோ டென்ஷனான வேலைகளை கையாண்டிருக்கிறீர்கள். அப்பொழுது வராத டென்ஷன், அனுபவப்பட்ட உங்களுக்கு இப்பொழுது புதிதாக  எங்கிருந்து வந்தது?

பண்ருட்டியார் : நான் எம்.ஜி.ஆரோடு இருந்த காலம் பொற்காலம். டெல்லிக்கு எம்.ஜி.ஆர். போகும்போதெல்லாம் என்னை தவறாமல் அழைத்துச் செல்வார். அவர் அங்கே பேசவேண்டிய பேச்சையெல்லாம் நான்தான் பேசுவேன். எம்.ஜி.ஆருக்கு எதிராக நான் செயல்படுகிறேன் என பேச்செல்லாம் வந்தது. அவர் ஒருமுறை கூட என்னை சந்தேகக் கண்ணோடு பார்த்த தில்லை. 83-ல் மிகவும் டென்ஷனாக இருந்த இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி ஐ.நா. சபையிலேயே பேசினேன். அன்றைய தலைவர் எம்.ஜி.ஆர். வேறு; இன்றைய தலைவர் விஜயகாந்த் வேறு. இருவரையும் ஒப்பிடக்கூட முடியாது. விஜயகாந்த்தை கறுப்பு எம்.ஜி.ஆர். எனச் சொல்வது தவறு. எம்.ஜி.ஆரிடம் நாங்கள் கருத்துகளைச் சொல்வோம். அவர் அதற்கு மதிப்பளிப்பார். அதனால் எம்.ஜி.ஆரிடம் பணிபுரிந்த போது டென்ஷன் வரவேயில்லை. "இது என் கட்சி, என் விருப்பப்படி நடத்துவேன்' எனச் சொல்லும் விஜயகாந்த்திடம் எதைப் பற்றியும் விவாதிக்க முடியாது. அதனால்தான் என் ஓய்வைப் பற்றிக்கூட அவரிடம் விவாதிக்கவில்லை. 

தே.மு.தி.க.வில் உங்களை டென்ஷனாக்கிய விவகாரம் எது?


பண்ருட்டியார்: தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் சேர்ந்து ஜெயலலிதா முதல்வர் ஆக வேண் டும் என ஓட்டு கேட்ட கட்சிகள். தி.மு.க., ஜெ.வுக்கு எதிராக ஓட்டு கேட்ட கட்சி. ஜெ.வின் செயல்பாடுகளை தே.மு.தி.க. விமர்சிக் கும்போது தி.மு.க. பாணியில் விமர்சிக்கக்கூடாது. ஒருவித தோழமையுடன்தான் விமர்சிக்க வேண்டும். தி.மு.க. பாணியில் விமர்சித்தால் தி.மு.க.தான் வளரும், தே.மு.தி.க. வளராது. இது என் கருத்து.  இதை நான் சொன்ன பிறகு எனக்கு டென்ஷன் அதிகமானது. தே.மு.தி.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நான் என்றுமே தலையிட்ட தில்லை. வேட்பாளர் தேர்வில் கூட நான் எந்த ஆலோசனையையும் சொன்னதில்லை. வன்னியர்கள் அதிகமான இடங்களில் கூட சம்பந்தமே இல்லாத வேட்பாளர்களை நிறுத்தினார்கள். நான் எதையும் கேட்ட தில்லை. ஆனால் சட்டமன்ற செயல்பாடுகள் பற்றி நான் கருத்துச் சொன்னதற்குப் பிறகு நிலைமைகள் மாறின. ஒருநாள்... "கறுப்புச் சட்டை போட வேண்டும்' என நான் சட்டமன்றத்திற்கு வந்தபிறகு சந்திரகுமார் வந்து சொன்னார். அந்த சமயத்தில் கறுப்புச் சட்டைக்கு நான் எங்கே போவது? இப்படி பல சம்பவங்கள் என் டென்ஷனை அதிகரித்தன. சகிப்புத்தன்மைக்கும் ஒரு அளவு உண்டு. அதனால்தான் இனி நாம் நமது வேலையைப் பார்க்கலாம் என்று ஓய்வு முடிவை எடுத்தேன்.

தி.மு.க. எதிர்ப்பு, எம்.ஜி.ஆர். புகழ் பாடுவது இவையெல்லாம் அ.தி.மு.க.வின் அரசியல் லட்சியங்கள். அதை தே.மு.தி.க.வில் நீங்கள் செயல்படுத்த நினைப்பது  முரண்பாடான செயல் அல்லவா?

பண்ருட்டியார் : எம்.ஜி.ஆரின் ஆட்சி தந்த நல்ல விஷயங்களை அ.தி.மு.க. செய்யத் தவறிய காலகட்டத்தில்தான் என்னைப் போன்ற எம்.ஜி.ஆர். விசுவாசிகள் தே.மு.தி.க.வில் இணைந்தோம். எம்.ஜி.ஆரின் நல்ல கொள்கைகளை விஜயகாந்த் மூலம் செயல்படுத்த முயன்றோம். இதில் எந்தத் தவறும், முரண்பாடும் இல்லை. 

இனி எதிர்காலம்...?


பண்ருட்டியார் : அடுத்த வாரமே கூட நிலைமைகள் மாறும். அப்பொழுது மறுபடியும் உங்களை சந்திப்பேன்.

ad

ad