புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013

யாழில் பிறந்த சிசுவை கொலை செய்து புதைத்த பெண்: கள்ளத் தொடர்பு காரணம்
யாழ்.உரும்பிராய் பகுதியில் பிறந்த சிசு ஒன்று சில மணிநேரத்திலேயே கொலை செய்யப்பட்டு உரப்பையில் போட்டு மண்ணிற்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.

உரும்பிராய் செல்வபுரம் தெற்கு ஜே.265 கிரமசேவகர் பிரிவின் கீழ் உள்ள பற்றைக்காணிக்குள் புதைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த சிசுவின் சடலம் நேற்று மாலை 4 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளது.
எனினும் நேற்று நள்ளிரவுவரை சிசுவின் சடலம் அங்கிருந்து மீட்கப்படவில்லை. பொலிஸாருடைய கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதிக்கு சென்ற ஆண், பெண் இருவர் இணைந்து நேற்று மாலை பற்றைக்குள் ஏதோ குழி தொண்றி புதைத்ததை இங்குள் ஒருவர் கண்டுள்ளார்.
இதனையடுத்து மேலும் சில அயலவரின் உதவியுடன் அங்கு சென்று பார்த்த போது உரப்பைக்குள் ஏதோ வைக்கப்பட்டு இறுகக் கட்டப்பட்டு தாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சந்தேகம் கொண்ட அவர்கள் எமது கிராம சேவகரின் உதவியுடன் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். பொலிஸாருக்கு உரப்பை புதைக்கப்பட்ட இடமும் இனங்காட்டப்பட்டுள்ளது.
குறித்த உரப்பையினை அங்கு புதைத்தவர்களுக்கு ஒரு உறவுமுறையான பெண் உள்ளார். அவர் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்து வந்தார். ஆனால் அப் பெண் வீட்டை விட்டு வெளியில் வருவது இல்லை. அவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் அப் பெண்ணின் குழந்தையாக அது இருக்கும் என்று ஊர் மக்கள் சந்தேகம் கொண்டனர். இதனையடுத்து அப் பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவருடைய வீட்டில் எவருமே இல்லை.
பூட்டியிருந்தது. அதே போன்று அவருடைய வீட்டின் அயலில் உள்ளவர்களும் தமது வீட்டினை பூட்டிவிட்டு வேளியேறிவிட்டனர்.
இதனால் அவர்கள் மேலும் சந்தேசம் எழுந்துள்ளது. இச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளோம் என்று பிரதேச மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ad

ad