புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013

டுபாய் விமான நிலையத்தில் திருடிய சிறிலங்கா அதிபரின் ஒளிப்படப்பிடிப்பாளர் – வகையாக மாட்டினார்

சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். 

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அண்மையில், தென்னாபிரிக்கா, மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு சிறிலங்கா அதிபர் கொழும்பு திரும்பிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டுபாய் விமான நிலையத்தில், சிறிலங்கா அதிபர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அவரது ஊடகக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவர், 2325 டொலர் (3 இலட்சம் ரூபா) பெறுமதியான, கண்காணிப்பு காணொளிப்பதிவு கருவியை சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றில் இருந்து திருடினார்.

அவர் அதனை தனது பையில் மறைத்துக் கொண்டு வேகமாக வெளியே செல்லமுயன்ற போது, அதனை கண்காணிப்பு காணொளிக் கருவி ஊடாக அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, சிறிலங்கா அதிபரின் குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்று விபரம் தெரிய வந்ததை அடுத்தே, குறிப்பிட்ட ஒளிப்படப்பிடிப்பாளரை டுபாய் அதிகாரிகள் விடுவித்தனர்.

நாம் சிறிலங்கா அதிபருக்கு உயர்ந்த மதிப்பளிப்பதால் தான், விடுவிக்கிறோம் என்றும், இல்லாவிட்டால் சிறையில் அடைத்திருப்போம் என்றும் டுபாய் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்துள்ளனர்.

கொழும்பு திரும்பியதும் குறிப்பிட்ட ஒளிப்படப்பிடிப்பாளர் தமது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பெலாரஸ் சென்றிருந்த போது, அவருடன் சென்றிருந்த சிறிலங்காவின் ஊடகப் பணிப்பாளர் ஒருவர், அங்குள்ள விடுதியில் இருந்து போர்வை ஒன்றைத் திருடிக் கொண்டு வந்து விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது,

ad

ad