புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசில்! இன்ப அதிர்ச்சியில் நாமல்
மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அமெரிக்காவின்
Houston மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
இதனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும், ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷவும் திருப்திலுள்ளதாக அரசின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார்.
எனினும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நிறைவடைந்த அன்றைய தினம் இரவே, அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அவசரமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்‌ஷ அறிவிக்கவில்லை எனத் தெரியவருகிறது. பசில் ராஜபக்‌ஷ இவ்வாறு அவசரமாக வெளிநாடு சென்றது நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினரை திருப்பதியடைச் செய்துள்ளது.
பசில் ராஜபக்‌ஷ அமெரிக்கா சென்றுள்ளதால், எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான ஆளும் கட்சியின் பரப்புரைப் பணிகளுக்கு நாமல் ராஜபக்‌ஷவே தலைமையேற்கவுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கான முன்னோடியாகவே நாமல் ராஜபக்‌ஷ இந்தப் பணிகளை ஏற்கவுள்ளார்.
கடந்த தேர்தல்களின் போது ஆளும் கட்சியின் பரப்புரைப் பணிகளுக்கு பசில் ராஜபக்‌ஷவே செயல்பட்டிருந்தார். இதற்கமைய எதிர்வரும் மேல் மாகாண சபைக்கான பரப்புரைப் பணிகளையும் பசில் ராஜபக்‌ஷவே மேற்கொள்ளவிருந்தார். அத்துடன், பசில் ராஜபக்‌ஷவின் மனைவி சட்டத்தரணி புஷ்பா ராஜபக்‌ஷவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கவும் பசில் ராஜபக்‌ஷ திட்டமிட்டிருந்தார். எனினும், இதற்கு நாமல் ராஜபக்‌ஷவும், ஷிரந்தி ராஜபக்‌ஷவும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், புற்று நோயிக்கான சிகிச்சைக்காக பசில் ராஜபக்‌ஷ அமெரிக்கா சென்றிருப்பதானது எதிர்வரும் தேர்தல் பரப்புரை பணிகள் நாமல் ராஜபக்‌ஷவிற்கும் வரும் என்பதுடன் முத்தையா முரளிதரனை அல்லது தனக்கு நெருக்கமான ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க முடியும் என்பதினால் நாமல் ராஜபக்‌ஷ திருப்பதியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பசில் ராஜபக்‌ஷ புற்றுநோய்க்காக Houston வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். சிகிச்சைப் பெற்று பூரணமாக குணமடையும் தருவாயிலேயே புற்றுநோய் நிலை காணப்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.  சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ராஜபக்‌ஷ சகோதரரான அமெரிக்காவில் வசித்துவரும் டட்லி ராஜபக்‌ஷவே கவனித்து வருகிறார்.
டட்லி ராஜபக்‌ஷ கோதாபய ராஜபக்‌ஷவிற்கு முதியவர் என்பதுடன் சமல், மகிந்த ஆகியோருக்கு இளைய சகோதரராவார்.
முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயினால் (Prostate cancer) பாதிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் Houston மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்றிருந்தார். இதற்கான ஒழுங்குகளையும் டட்லி ராஜபக்‌ஷவே கவனித்திருந்தார் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad