புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014


ஏழாவது ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் விளையாடிய, விளையாடி வரும் 46 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக் மற்றும் யுவராஜ் உள்பட 11 இந்திய வீரர்கள் ரூ.2 கோடிக்கான அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழா
வது ஐபிஎல் பேட்டி நடைபெறும். இதற்கான ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, மும்பை அணிகள் கடந்த தொடரில் தங்கள் அணியில் இடம்பெற்றிருந்த 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. பிற அணிகள் தங்களுக்குப் பிடித்த ஒரு சில வீரர்களைத் தக்கவைத்தது. தவிர, ஏலத்தின்போது "ஜோக்கர் கார்டு' மூலமும் தாங்கள் விரும்பும் வீரரை அணிகள் தக்கவைக்கலாம்.
ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அடிப்படை விலை நிர்ணயம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 208 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு தயாராக உள்ளனர். இதில், 46 பேர் இந்திய வீரர்கள். அடிப்படை விலை ரூ.50 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1.5 கோடி, ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சமீபகாலமாக ஃபார்மின்றித் தவித்து வரும் சேவாக், யுவராஜ் ஆகியோர் ரூ.2 கோடி அடிப்படை விலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தவிர யூசுஃப் பதான், தினேஷ் கார்த்திக், பிரவீண் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, ராபின் உத்தப்பா உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் ஆஷஸ் நாயகன் மிச்செல் ஜான்சன் இந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 36 பந்துகளில் அதிவேக சதம் அடித்து உலகின் கவனத்தை ஈர்த்த நியூஸிலாந்தின் கோரி ஆண்டர்சனின் அடிப்படை விலை ரூ.1 கோடி. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், புஜாரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் ரூ.1.5 கோடி அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அசோக் டிண்டா, ரித்திமான் சாகா, மொஹித் சர்மா ஆகியோரின் அடிப்படை விலை ரூ.1 கோடி. தில்லியைச் சேர்ந்த பர்விந்தர் அவானா ரூ.50 லட்சம் அடிப்படை விலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உமேஷ் யாதவின் அடிப்படை விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வருண் ஆரோன் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை எனத் தெரிவித்திருப்பதால் அவரது பெயர் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியிலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக்(43)தான் வயதான வீரர். இவரது அடிப்படை விலை ரூ.1.5 கோடி. இதுதவிர, கடந்த முறையே இதுதான் என் கடைசி ஐபிஎல் எனக் குறிப்பிட்ட மைக் ஹஸியின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை வீரர்கள் சங்ககரா,தினேஷ் சண்டிமால், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், மிச்செல் மார்ஷ், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கெமார் ரோச் ஆகியோரது பெயர் பட்டியலில் இல்லை.
வெளிநாட்டு வீரர்கள் யார் யார்?
ஜார்ஜ் பெய்லி, பிராட் ஹாடின், பிராட் ஹட்ஜ், மைக்கேல் ஹஸி, மிச்செல் ஜான்சன், பிரட் லீ, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பட்டின்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், அலெக்ஸ் ஹேல்ஸ், கெவின் பீட்டர்சன், பிரண்டன் மெக்கல்லம், ரோஸ் டெய்லர், காலிஸ், தில்ஷன், ஜெயவர்தனே, மேத்யூஸ், சாமுவேல்ஸ்.

ad

ad