புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2014

பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீது கொடுந்தாக்குதல் : நெடுமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 20.12. 2013 அன்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறையினர் ஈழ ஆதரவுத் தமிழின
உணர்வாளர்களை கைதுசெய்யும் வேலையில் இறங்கினர். பிரணாப் முகர்ஜி சென்னையை விட்டு போன பிறகே இவர்களை விடுவித்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர்த.வெள்ளையன், தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை. கு.இராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் சைதை க.சிவராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் குடந்தை , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனீபா உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
 

ad

ad