புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படும் வாய்ப்பு? 
2014ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதற்காக ஆடுகளங்களை தயார்படுத்துமாறு ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம்
கேட்டுக் கொண்டுள்ளது.

2014 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அது இன்னும் உறுதியாகவில்லை என ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது.

பங்காதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையால் கடந்த சில மாதங்களில் மாத்திரம் 150 பேர் உயிரிழந்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் பங்களாதேஷில் இப்போட்டியை நடத்துவது சந்தேகத்திற்குரியது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் தங்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் ஹோட்டலுக்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து வீரர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் தற்போது பங்களாதேஷில் காணப்படும் அரசியல் சிக்கல் நிலை நிறைவுக்கு வந்தால் ஆசிய கிண்ண போட்டி அங்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 பெப்ரவரி 28 தொடக்கம் மார்ச் 8ம் திகதிவரை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ad

ad