புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

பங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ; இலங்கையணி இன்னிங்ஸ், 248 ஓட்டங்களால் வெற்றி

பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதில் இலங்கை அணியின் இன்னிங்ஸ் வெற்றியானது அது டெஸ்ட் வரலாற்றில் பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் இரண்டாவது இடத்தை பிடித்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பாப்வேயுக்கு எதிராக புலவாயோவில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்களால் வென்றதே இதன் முதலிடத்தில் காணப்படுகிறது.
மிர்பு+ரில் நடந்த டெஸ்டின் நான்காவது நாளான நேற்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 498 ஆட்டங்களை பெறவேண்டிய இக்கட்டான நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி தொடர்ச்சியா விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் அந்த அணி நான்காவது நாளின் பகற்போசன இடைவேளைக்கு முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மோசமான தோல்வியை சந்தித்தது. இதன்படி பங்களாதேஷ் அணி 51.5 ஓவர்களில் 250 ஓட்டங்களுக்கே சுருண்டது. முமைநுல் ஹக் மாத்திரம் அரைச்சதம் ஒன்றை பெற்றார். 57 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 50 ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய டில்ருவன் பெரேரா 109 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். தனது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பெரேராவின் சிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சு இதுவாகும். தவிர சுரங்க லக்மால் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
முன்னதாக பங்களாதேஷ் தனது முதல் இன்னிங்ஸில் 232 ஓட்டங்களையே பெற்றதோடு பதிலுக்கு சிறப்பாக செயற்பட்ட இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்து 730 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை; நிறுத்திக்கொண்டது. இதன்போது மஹேல ஜயவர்தன இரட்டைச் சதம் பெற்றதோடு கவ்'hல் சில்வா மற்றும் கித்ருவன் விதானகே ஆகியோர் தனது கன்னி சதத்தை பு+ர்த்திசெய்தனர்.
இதில் இரட்டை சதம் பெற்ற மஹேல ஜயவர்தன போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி பெப்ரவரி 4 ஆம் திகதி சிட்டகோனில் ஆரம்பமாகவுள்ளது.

ad

ad