புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

இலங்கையில் வருடந்தோறும் 25,000 பேர் புற்றுநோய்சிகிச்சைகளுக்காக புதிதாக பதிவு

சுகாதார கல்விப் பணியகம் அதிர்ச்சி தகவல்
பெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை புற்றுநோய்கள் பாரிய அச்சுறுத்தல்
சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் குணப்படுத்தலாம்

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன்படி வருடாந்தம் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக 25 ஆயிரம் பேர் புதிதாக தம்மை பதிவு செய்து கொள்வதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்தது.
இவர்களுள் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் புற்றுநோயினால் உயிரி ழந்ததாகவும் பணியகத்தின் வைத்திய அதிகாரிகள் நேற்றுக் கூறினர்.
இதேவேளை, புற்றுநோய்க்கு உள்ளானவர்கள் இறுதிக் கட்டத்தில் சிகிச்சைக்காக வைத்தியர்களை நாடி வருவதே ஆஸ்பத்திரிகளிலிருந்து தமக்கு கிடைக்கும் பொதுவான முறைப்பாடு எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
புற்றுநோய் தவிர்க்கப்பட முடியாத போதிலும் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும். ஆகையினால், புற்றுநோய்க்கு ஆளான ஒருவர் இனிமேல் தன்னால் எதுவுமே செய்ய இயலாது என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனால் எம்மால் நோயாளிகளை முன்னரை விடவும் அதிகமாகவே குணப்படுத்த முடியுமெனவும் வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய உருவ மாற்றம், தலைமயிர் கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவையேயாகும். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும். ஆகையினால் சமூகத்திற்கு வெட்கப்பட அல்லது அஞ்சியோ சிகிச்சைகள் ஆரம்பிப்பதனை காலம் தாழ்த்தவோ அல்லது தவிர்ப்பதோ பிழையான கொள்கையெனவும் புற்றுநோய் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் தமது பிரதேச செயலகத்திலுள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்தில் இலவசமாக முன்னெடுக்கப்படும் முழுமையான உடல் மருத்துவ பரிசோதனைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டுமெனவும் வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை தவிர்த்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தனர்.
பெப்ரவரி 04 ஆம் திகதி உலக புற்றுநோய் தினமாகும். அதனை முன்னிட்டு இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் செய்தியாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நேற்று சுகாதார கல்விப் பணியகத்தில் நடைபெற்றது. இதன்போதே வைத்திய அதிகாரிகள் மேற்படி விளக்கமளித்தனர்.
பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோயும் இரண்டாவதாக கர்ப்பப்பை புற்றுநோயுமே பாரிய அச்சுறுத்தலாகவுள்ளன. புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஷிரந்திக்கா வித்தான கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் வருடந்தோறும் 2 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவதாக கூறினார்.
மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவோரில் 470 பேர் வருடந்தோறும் உயிரிழப்பதாகவும் சுமார் 12 ஆயிரம் பெண்கள் முறையான சிகிச்சைகளுடன் தொடர்ந்தும் உயிர் வாழ்வதாகவும் அவர் கூறினார்.
நூறு ஆண்களில் ஒரு ஆணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், குடும்பத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலோ, தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், 35 வயதிற்குப் பின்னர் முதற்பிள்ளை கிடைக்கப்பெற்ற தாய்ப்பால் மற்றும் ஈஸ்டரஜன் தொடர்பிலான சத்திர சிகிச்சைக்கு உள்ளானவர்கள் கூடுதல் அக்கறையுடன் சோதனைகளில் ஈடுபடும் அதேநேரம் 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் வருடத்திற்கு ஒரு தடவையாயிலும் மார்பகங்களை சோதனைக்குட்படுத்த வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.
இருப்பினும் முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி என்பவற்றின் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
வைத்தியர் என். மாபிட்டிகம கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பில் விளக் கமளிக்குகையில் உலகில் 02 நிமிடத்திற்கு ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாகவும், இவற்றுள் 90 சதவீதமானவர்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்தவர்களெனவும் கூறினார்.
2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயினால் உயிரிழக்கலாமெனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை வருடந்தோறும் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேர் புதிதாக இனங்காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் 35 வயதை அடைந்த ஒவ்வொரு பெண்ணும் நாடு முழுவதுமுள்ள பிரதேச மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச மருத்துவ சோதனைகளுக்கு தம்மை உட்படுத்துவது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆண்கள் அதிகளவில் வாய் புற்றுநோய்க்கு ஆளாவதாக டாக்டர் ஹேமந்த சமரசிங்க கூறினார்.
சுமார் ஆயிரம் பேர் வரையிலானோர் வாய் புற்றுநோயின் காரணமாகவே ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். பாபுல், பான்பராக் போன்றவற்றை உபயோகிப்பதனால் தற்போது 30 வயதான இளைஞர்களும் வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாவதாக அவர் தெரிவித்தார். இவர்களை நாளடைவில் பையிப்ரோசியா என்னும் நோய் தாக்குவதனால் இறுதியாக வாயை திறக்க முடியாமல் போய்விடுமெனவும் அவர் எச்சரித்தார்.
மேலும் தாம்பூளத் தட்டு மற்றும் சமய நிகழ்வுகளின்போது வெற்றிலையுடன், பாக்கு, புகையிலை மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பெளத்த மதகுருமாருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
30 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் நாள்தோறும் புகையிலை பாவித்தும் புகை பிடித்தும் எப்போதாவது மதுவும் அருந்துவார்களாயின் அவர்களை புற்றுநோய் தாக்குவதற்கான அபாயம் அதிகமெனவும் எப்போதாவது இருந்தியிருந்து புகையிலை பாவிப்பவர்களுக்கும், இந்நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் இவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad