புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2014

திமுக மாநில மாநாட்டில் 25 ஆயிரம் மாணவரணியினர் சீருடையுடன் பங்கேற்பு
திமுக மாநில, மாவட்ட மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கோவை கணேஷ்குமார், குத்தாலம் அன்பழகன், மதுரை மகிழன்
முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி வரவேற்றார்.

கூட்டத்தில் கே.என்.நேரு பேசுகையில், திமுகவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு மாணவரணியினர் உறுது ணையாக இருந்தனர். இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் மாணவரணியின் பங்கு பெருமளவில் இருந்தது. மாணவர்களை இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபட பெற்றோர்கள் பெரும் பாலும் அனுமதிப்பது இல்லை. இடஒதுக்கீட்டை போராடி பெற்றதால் தான், இன்று பல் வேறு தரப்பினரும் வேலைவாய்ப்பை பெற முடிகிறது.
ஆனால் மத்திய பல்க லைக் கழகங்களில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவில் சேர முடியாத நிலை உள்ளது. மாணவரணியினர் கல்லூரிகளுக்கு சென்று உறுப்பினர் சேர்க் கையில் ஈடுபட வேண்டும்.
இன்று திமுகவில் உயர் பதவியில் இருக்கும் பலரும் மாணவரணியில் இருந்தவர்கள். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மாணவரணியினர் பிரசாரத்தில் ஈடுபட வேண் டும். திமுக மாநில மாநாட்டில் மாணவரணியினர் அதிகளவில் பங்கு கொள்ள வேண்டும்.
இம்மாநாட்டில் 25 ஆயிரம் மாணவரணியினர் கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து பங்கேற்க உள்ளனர்’’என்று  பேசினார்.
கூட்டத்தில் மாநகர செயலாளர் அன்பழக்ன, முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இன்ஜினியர் சுரேஷ், துணை அமைப்பாளர் மண்ணச்சநல்லூர் சுரேஷ், பகுதி செயலாளர் கண்ணன், மாநகர இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad