புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

 மாகாண அரசும், மத்திய அரசும் ஒன்றுபட வேண்டும்; வாசுதேவ நாணயக்கார யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்து தெரிவிப்பு 
சமூக ஒருங்கிணைப்பு வாரத்தில் அரச கரும ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டி தொடர் இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

வேறுபாடுகள் இருப்பது பிழையல்ல அதுவும் ஜனநாயகத்திற்கு அவசியமானது.ஆனாலும் மக்கள் தெரிவு என்பது மிகவும் முக்கியமானது.

நம்மவர்களிடத்தில் உள்ள ஒரு பாரதூரமான பிரச்சனை ஒற்றுமையின்மையே அதே போல தான் வரலாற்று ரீதியில் ஒற்றுமையினை வலுப்படுத்த ஜனாதிபதியும் மறுபுறம் வடமாகாணத்திற்கு முதலமைச்சரும் பாடுபடுகின்றனர்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா ஒற்றுமையை வலுச்சேர்ப்பதற்கு பாடுபட்டது போன்று நாமும் மொழி, இனம், மதம் என பாகுபாடு காட்டாது  எமது நாட்டின் ஒற்றுமைக்கு பாடுபடவேண்டும்.

அத்துடன்  மாகாண அரசும் ,மத்திய அரசும் ஒன்றுபடுமாயின் அதுவே ஒற்றுமையின் அடித்தளமாக விளங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் தமிழ் மொழியும், தென்மாகாணத்தில் சிங்கள மொழியும் நாடுபூராகவும் தமிழ் சிங்களம் என்று இரண்டு மொழிகளுமே அதிகம் பேசப்படுகிறது.
எனவே தான் இதய பூர்வமாக நம் ஒவ்வொருவரிடையே சமத்தவம் நிலவ வேண்டுமாயின் மொழி என்ற பிரிவினையை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் நாடு சுவீட்சமடையும் என்பதில் எந்த ஜயப்பாடும் இல்லை என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள  பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட விவாதப்போட்டியில் தெரிவாகி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு  அரசமொழி ஆணைக்குழுவின் செயலாளர் ஜயசிங்க யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பாலசுந்தரம்பிள்ளை எனப்பலர்  கலந்து கொண்டனர்.




ad

ad