புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014

இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னரின் வாரிசு வேலூரில் மரணம் 
news
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கரின் 3 வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்துள்ளார்.
 
வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த பிருதிவிராஜ் அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கர் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார். போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவானார்கள்.
 
அவர்களை சிறைபிடித்த ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டையில் 16 ஆண்டுகள் சிறை வைத்தனர். 1832 இல் விக்கிரம ராஜசிங்கர் மரணம் அடைந்தார். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் பாலாற்றங்கரையில் 1990 இல் முத்து மண்டபம் கட்டபட்டது.
 
இலங்கையில் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்த தமிழ் மன்னரின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் கம்பீர சின்னமாக இன்றும் அங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad