புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2014

நடிகை வனிதா 3வது திருமணம் 
‘மாணிக்கம்’ என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தவர், வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமார்–மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் ஆவர்.இவருக்கும், நடிகர் ஆகாசுக்கும் முதலில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து
கொண்டார்கள். ஆகாஷ் மூலம் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான். இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்கள்.

அதன்பிறகு வனிதா, தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் வனிதாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கடந்த வருடம் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இந்த நிலையில் வனிதாவுக்கும், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், நடிகை அல்போன்சாவின் தம்பி ஆவார். ராபர்ட்டை, வனிதா 3–வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்

ad

ad