புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

லாரி - மினி வேன் மோதல் : சென்னையை சேர்ந்த 4 பேர் பலி
மதுரை அருகே இன்று காலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். 


சென்னை வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் ஜமால் மைதீன். இவர் மதுரை சக்கிமங்கலத்தில் நடைபெறும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மினி வேனில் குடும்பத்தினருடன் புறப்பட்டார். வேனில் இவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பயணம் செய்தனர். மினி வேனை சையத்சுலைமான் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி அருகே மணப்பட்டி என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நின்றிருந்த மணல் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜமால்மைதீன் (60), லைலா (53), டிரைவர் சையத் சுலைமான் (35) ஆகிய மூவரும் பலியாயினர். படுகாயமடைந்த மற்றவர்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வழியிலேயே அப்துல்ரஜாக் (27) இறந்தார்.


படுகாயமடைந்த அஜய்பாத்திமா (35), முகமது தாபிக் (3), ஆயிஷா (21), அசன்பாத்திமா (23), தௌபிக் (6), அப்துல்ரஹீம் (4), காமிளாபேகம் (25), சம்சுதீன் (28), பேகம் (28), உம்மசலீமா (35) உள்பட 10 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்குப் பின் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ad

ad