புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

கோழிக்கறி வியாபாரியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (வயது 45) அதே பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்வபாத்யா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


நாகேஸ்வரராவுக்கு பனையூர் ராஜுவ்காந்தி நகர் 3–வது தெருவில் கணவரை இழந்து மகனுடன் வசிக்கும் கலையரசியுடன் கள்ளக்காதல் இருந்து வந்தது. தினமும் இரவில் அங்கு தூங்குவது வழக்கம். 
இன்று அதிகாலை கலையரசி பதட்டத்துடன் தெருவில் வந்து கூச்சலிட்டார். காதலன் நாகேஸ்வரராவை மர்ம நபர்கள் வெட்டி கொன்று தப்பி விட்டதாக கூறினார்.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் நாகேஸ்வரராவ் பிணமாக கிடந்தார். இது குறித்து கானத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
வீடு முழுவதும் சிதறி கிடந்த ரத்த கரையில் கால்தடங்கள் காணப்பட்டன. கலையரசியின் காலில் ரத்தம் உறைந்து இருந்தது. அவரை பிடித்து விசாரித்த போது காதலனை அவர் கொலை செய்தது தெரிந்தது.  அவர் ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க முடியாது என்று போலீசார் சந்தேக்கிறார்கள். எனவே இதில் தொடர்புடையவர்களை குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.
நாகேஸ்வரராவ் கொலையுண்டது பற்றி அறிந்தும் அவரது மனைவி செல்வபாத்யா மற்றும் மகன், மகள் அங்கு வந்தனர். அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. நாகேஸ்வரராவ் உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இரவில் நாகேஸ்வரராவுக்கும், கலையரசிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு அவர்களுக் கிடையே ஏற்பட்ட தகராறு சத்தம் நீண்ட நேரம் கேட்டதாகவும் கலையரசிக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கலையரசியின் தம்பிகள் 2 பேருக்கு நாகேஸ்வரரராவ் கோழிக்கடை வைத்து கொடுத்து உள்ளார்.  சில நாட்களாக கலையரசி, நாகேஸ்வரராவிடம் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. எனவே இந்த தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கலையரசியின் தம்பிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

ad

ad