புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

ஆசனவாயில் பதுக்கி தங்ககட்டி கடத்திய 4 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. இதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்தும் சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை
செய்தனர்.

இதில் கொழும்பு விமானத்தில் வந்து இறங்கிய முகமது, இப்ராகிம், அப்துல்லா, சிங்கப்பூர் விமானத்தில் வந்த ரகுபதி ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
4 பேரையும் தனி அறைக்கு அழைத்து சோதனையிட்டனர். அதோடு ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அவர்கள் ஆசனவாயிலில் பதுக்கி தங்கக்கட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். 4 பேரிடம் இருந்து தலா 400 கிராம் வீதம் 1600 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். 4 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். கைதான 4 பேரும் ராமநாதபுரம் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள்.

ad

ad