புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2014

பேஸ்புக் காதலனிடம் பணத்தை பறிகொடுத்த இளம் பெண் - கண்டியில் சம்பவம்
சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய காதலனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இழந்த இளம் பெண் கண்டி பொலிஸாரிடம் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.கண்டி -தெய்யன்வெல போதியங்கன மாவத்தை வசிக்கும் இளம் பெண்ணொருவர் பேஸ்புக் மூலமான இளைஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
மலேசியாவில் தொழில் புரிந்து வருவதாக கூறப்படும் அந்த இளைஞருடன், இந்த பெண் இரவு பகலாக மேற்கொண்டு வந்த கருத்து பரிமாறல் ஊடாக இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென யுவதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த இளைஞர் தான் இலங்கை வந்துள்ளதாகவும் மலேசியாவில் இருந்து கொண்டு வந்த பொருட்களை சுங்க அதிகாரிகளிடம் இருந்து விடுவிக்க தேவையான இலங்கை ரூபா தன்னிடம் இல்லை என்பதால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை தருமாறு கேட்டுள்ளார்.


இதனையடுத்து கண்டி முல்கம்பளை பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றுக்கு வருமாறு கூறிய பெண், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா இளைஞரிடம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் கொழும்பு செல்வதாக கூறி திரும்பிச் சென்ற இளைஞர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இளைஞரின் பேஸ்புக் கணக்கு ஊடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது பேஸ்புக் கணக்கு இரத்துச் செய்யப்பட்டிப்பது தெரியந்துள்ளது.

இதனையடுத்து கண்டி பொலிஸ் நிலையத்தில் அந்த பெண் முறைப்பாடு செய்துள்ளார். கண்டி பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad