புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

 8ஆம் திகதி வரணி பகுதியில் உள்ள 52 ஆவது படைத்தலைமையகம் முற்றாக விடுவிக்கப்படவுள்ள து 

யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர் என இடமாற்றம் பெற்றுச் செல்லும் வேளையில் கட்டளைத் தளபதி மேஜர்
ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

கட்டளைத்தளபதி என்ற கடமையில் இருந்து நாளைய தினம் விடுபட்டு இராணுவ தலைமையகத்திற்கு செல்லவுள்ள ஹத்துருசிங்கவிற்கு பிரியாவிடை வைபவம் நேற்று வசாவிளானில் நடைபெற்றது.

அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் இராணுவ தேவைகளுக்காக பொதுமக்களுடைய சொத்துக்கள், வீடுகள் மற்றும் நிலங்களை நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

எனினும் சொத்துக்களை விட்டு இருப்பது என்பது கடினம் என்பதை நான் அறிவேன். எனவே இதற்கான தீர்வு ஒன்று வேண்டும் என்பதையும் அறிந்தவனான இருக்கின்றேன்.
இதேவேளை எதிர்வரும் 8ஆம் திகதி வரணி பகுதியில் உள்ள 52 ஆவது படைத்தலைமையகம் முற்றாக விடுவிக்கப்படவுள்ளதுடன் உரிமையாளர்களிடமும் அவர்களது நிலங்கள் , வீடுகளும் கையளிக்கப்படவுள்ளது என்றார். 

ad

ad