புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த பனிப்புயல்

தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது, இதன் காரணமாக இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் அனைவரும் இரவு முழுவதும் பாடசாலையில் காலம் கழிக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள பல மாகாணங்கள் போக்குவரத்தின்றி முடங்கிப்போனதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பனிக்கட்டி மற்றும் பனி மழையால் டெக்சாஸ், ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளை அப்பனிப்புயல் புரட்டி எடுத்தாக கூறப்படுகிறது.
வாகனங்களில் வந்தவர்கள் இப்பனிப்புயலில் சிக்கி கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்தவாறு வீதியில் பொழுதை கழித்துள்ளனர். மேலும் போக்குவரத்து தொடர்பாக 791 விபத்துகள் ஏற்பட்டதாகவும் ஆனால் அதன் காரணமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அட்லாண்டா மேயரான காசிம் ரீட் தெரிவித்துள்ளார்.
தங்களது முதல் பணியே சாலையில் சிக்கி பரிதவித்து வரும் வாகன உரிமையாளர்களை உடனடியாக மீட்டெடுப்பதே என்று அவர் கூறியுள்ளார்.
இப்புயலில் சிக்கி அட்லாண்டாவில் ஐந்து பேரும் ஜார்ஜியாவில் ஒருவரும் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அட்லாண்டாவுக்கும், ஹவுஸ்டனுக்கும் இடையேயான 1000 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் காவல்துறையினர் மிகுந்த துணிச்சலுடன் விபத்தில் சிக்கியவர்களையும், புயலால் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டெடுத்து வருகின்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ad

ad