புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2014

நா .க.த.அ . பிரதமர் உருத்திரகுமரனின் அறிக்கை 
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பை வீச்சாக்குவதற்கு, நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் பங்களிப்புக்கும் அப்பால் சென்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கமாக நீடித்து நிலைக்கக்கூடிய
பல்வேறுபுதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டியதும் இன்று அவசியமாக உள்ளது. 
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களாக இல்லாத பல்வேறு துறைசார்நிபுணர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்புகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக இன்று உள்ளது. நாடு கடந்த தமிழீழஅரசாங்கத்தின் சிறப்பான செயற்பாட்டை வழிநடாத்த பிரதமர் பணிமனையினைப்பலப்படுத்தி விரிவுபடுத்துவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது.
இவற்றையெல்லாம்கவனத்திற் கொண்டுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்கானகட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை இங்கே குறிப்பிடவிரும்புகிறேன்.
எனவேஇத்தவணையின்போது நாடுகடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையினை எண்ணிக்கையில்குறைத்துக்கொண்டு, கடந்த தவணையின்போது அமைச்சுக்களாக இருந்த சில துறைகளைத்துறைசார் நிறுவனங்களாக மாற்றியமைப்பது எனவும் நான் முடிவுசெய்திருக்கிறேன்.
பிரதமர்பணிமனையினை வலுப்படுத்தவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பிரதமர்செயலகப்பணிமனை நிர்வாகத்தின் பொறுப்புள்ளவராக ஒரு தலைமைச் செயலரை (Chief Executive Secretary) நியமிப்பது என முடிவு செய்திருக்கிறேன். அத்தலைமைச்செயலர் எனது சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாகவிடயங்களுக்குப் பொறுப்பாக இயங்குவார். அதேபோல நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் கட்டமைப்புக்களையும் செயற்பாடுகளையும் நாடுகள்தழுவியரீதியில் வளர்த்தெடுக்கப் பிரதமர் பணிமனைப் பிரதிநிதிகள் பலரைநாடுகள் மட்டத்தில் நியமிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் புதிய துறைசார் நிறுவனங்கள் செயற்பாட்டளவில்அமைச்சுகளுக்கு இணையான வகையில் இயங்கும். இந்நிறுவனங்கள் பிரதமர்பணிமனையால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் இந்நிறுவனங்களின் செவ்வையானசெயற்பாட்டுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பிரதமர் பணி;மனை வழங்கிக்கொள்ளும்.
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும்வடிவடைப்பதற்குத் துணைசெய்யும் முகமாக, கொள்கை வடிவவமைப்புக் குழுக்களையும்பிரதமர் பணிமiனியின் கீழ் உருவாக்கியுள்ளோம்.
தற்போதுஅறிவிக்கப்பட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாகக்கட்டமைப்பு தேவையேற்படும் போது, மேலும் விரிவு செய்யப்படும் என்பதனையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தனித்தனிச்செயற்திட்டங்கள் (Projects) குறித்த விபரங்கள் விரைவில் மக்களுக்கு அறியத்தரப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதுள்ளஅமைச்சுகளுக்கும், நிறுவனங்களுக்கும் துணையாக, அரசவை உறுப்பினர்களைக்கொண்ட குழுக்களும் உருவாக்கப்படும். புதிய அரசவையில் அங்கம் வகிக்கும்அத்தனை உறுப்பினர்களும் அமைச்சர்-உறுப்பினர் என்ற வேறுபாடின்றி ஏதோ ஒருசெயற்திட்டத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு உற்சாகத்தோடு உழைப்பதற்குத்தம்மைத் தயார்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்போதுகட்டமைத்திருக்கும் நிர்வாகக் கட்டமைப்பினை வருடம் தோறும் மீளாய்வு செய்துஅதற்கமைய தேவையான மாற்றங்களை மேற்கோண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்செயற்பாடுகளை செயல்வலுவுடன் முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுச் செயலகக்கட்டமைப்பு விபரங்கள் :
பிரதமர்: திரு விசுவநாதன் ருத்ரகுமாரன்
தலைமைச்செயலர்: பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா
துணைப் பிரதமர்: திரு கனகரட்ணம் மனோரஞ்சன்
அமைச்சுகள்:
- நிதி (Finance) : திரு கனகரட்ணம் ஐயந்தன்
- அனைத்துலக விவகாரங்கள் (International Affairs) : திரு கனகேந்திரம் மாணிக்கவாசகர்
- தாயக அபிவிருத்தி Homeland Development) : திருமதி பாலாம்பிகை முருகதாஸ்
- புலம்பெயர் சமூக விவகாரங்கள் (Diaspora Affairs) : திரு நிமால் விநாயகமூர்த்தி
- ஊடகமும் மக்கள் விவகாரங்களும் (Media and Public Affairs) : திரு சுதர்சன் சிவகுருநாதன்
- இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் (Youth and Cultural Affairs) : செல்வி கார்த்திகா விக்னேஸ்வரன்
துறைசார் நிறுவனங்கள் :
– இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளும் (Centre for Prevention and Prosecution of Genocide ): பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா
– ஏதிலிகள் நலன் மற்றும் மீள்குடியமர்வு (Center for Refugees Welfare And Resettlement): திரு ரட்ணா முத்துக்குமாரசாமி
– பெண்கள் சிறுவர் மூத்தோர்(Center for Women, Children and Elderly):திருமதி ரஜனிதேவி சின்னத்தம்பி
– மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பநலன் (Centre for Welfare of the Families of Cadres and Martyrs) : திரு செல்வராஜா ஜெயம்
– செயலகம், ஐக்கிய நாடுகள் பிரதிநிதி (Secretariat/United Nation Representative) : திரு.முருகையா சுகிந்தன்
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad