புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

அவுஸ்திரேலிய மாணவி இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார
அவுஸ்திரேலிய மாணவி ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
அம்பலாங்கொட பகுதிக்கு அருகில் உள்ள கடலில் அமைந்திருக்கும் ஜென்டவன மலைக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவர், ஆமைகள் தொடர்பில் கல்வி சுற்றுலா நிமித்தமே குறித்த கடலுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் தம்முடன் வந்தவர்களிடம் இருந்து பிரிந்து தனித்திருந்த வேளையிலேயே இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.
இவருடன் குறித்த சுற்றுலாவில் 8 பேர் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தநிலையில் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கல்விச் சுற்றுலாவை மேற்கோண்டு குறித்த மாணவி, 15 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களுடன் இலங்கைக்கு சென்றிருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, அவரை வல்லுறவுக்குட்படுத்திய சுற்றுலா வழிகாட்டியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபர் அந்தப் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், எனினும் அவரைக் கைது செய்வதற்கு நாடு முழுவதிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பின்னர், சுற்றுலா மூலம் அதிக வெளிநாட்டு வருவாயை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள  இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீதான இத்தகைய பாலியல் துன்புறுத்தல்கள் பெரும் சவாலாகியுள்ளது
அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் இலங்கையில் அதிகரித்துள்ளது.
சில நாடுகள் இதுகுறித்து தமது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ad

ad