புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

வடமாகாணத்தில் ஆளுநரா அல்லது முதலமைச்சரா ஆட்சி புரிய வேண்டும்? - சிவாஜிலிங்கம் கேள்வி
வடமாகாணத்தின் அடாவடியான ஆளுநருக்குப் பின்னால் எங்களால் அலைய முடியாது, வடமாகாணத்தில் ஆளுநரா அல்லது முதலமைச்சரா ஆட்சி புரிய வேண்டும்? என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், இங்குள்ள பொலிஸாருடன் எங்களால் மல்லுக்கட்ட முடியாது. அந்தவகையில், பொலிஸ் அதிகாரத்தினை வடமாகாண சபையினால் உருவாக்க முடியாதா? எனவும் அவர் வினா தொடுத்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்குமான இருநாள் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகி இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.
இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தச் செயலமர்வில் யாழ்.பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் என்.செல்வகுமரன் மாகாண மட்டத்தில் அரசியலமைப்பில் ஜனநாயகம் என்னும் தொனிப்பொருளில் கருத்துக்களை வழங்கினார்.
அதன்போது, வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் கூற்றுக்கு பதிலளித்த செல்வகுமரன்,
ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் சட்டத்திற்கு முரணாக எதுவும் செய்ய முடியாது  என்றார்.
அதனைத்தொடர்ந்து 'மாகாண நிர்வாகம்' என்ற தொனிப்பொருளில் இலங்கை நிர்வாக சேவையின் இளைப்பாறிய சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒஸ்ரின் பெர்னான்டோ கருத்துக்களை வழங்கினார்.
இச்செயலமர்வில், சுவிஸ் தூதரக அதிகாரி டேவிட், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண உள்ளூராட்சி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ad

ad