புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2014

நடிகைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: ஆளும் கட்சி தீர்மானம் - ஐ.தே.கட்சியில் மற்றுமாரு ஆளும் கட்சி உறுப்பினர் இணைவு
மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்த தொலைக்காட்சி நடிகைகள் எவருக்கும் வேட்புமனுக்களை வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
ஆளும் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரியுள்ள நடிகைகள் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை கவனத்தில் கொண்டு வேட்புமனு குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக பிரபல கலைஞர்களும் இந்த நடிகைகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனடிப்படையில், ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தேர்தலில் களமிறக்க எண்ணிய, பிரபல பாடகி ஜிஞ்சர் மற்றும் தொலைக்காட்சி நடிகை ருவாந்தி மங்களா ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர முதல்வர் தனசிறி அமரதுங்க, பரிந்துரை செய்த நடிகை கயேஷா பெரேராவுக்கும் வேட்புமனு கிடைக்காது என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் அனார்கலி அகர்ஷாவுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது என ஆளும் கட்சி கூறியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நடிகை நதீஷா ஹேமமாலி தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐ.தே.கட்சியில் மற்றுமாரு ஆளும் கட்சி உறுப்பினர் இணைவு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொட்டிகாவத்தை - முல்லேரியாவ பிரதேச சபையின் உறுப்பினரான சுஜீவ தர்மவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ள அவர், எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான காலஞ்சென்ற டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் மகன் காவிந்த ஜயவர்தனவும் அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றதுடன் அவரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

ad

ad