புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2014

ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கினால் சமரசத்துக்கு உடன்படுவேன்: மு.க.அழகிரி பேட்டி
மதுரையில் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
வாழ்த்து அனுப்பியிருந்தார் என்றும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

பலர் தனக்கு தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்தார்கள், வெளிநாடுகளில் இருந்தும் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள் என்றும் கூறிய அழகிரி, அவர்களுக்கெல்லாம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
மீண்டும் உங்களுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, நான் பிறந்த நாள் விழாவில் இருக்கிறேன். அங்கே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது என்றார்.
உங்கள் பிறந்த நாளுக்கு திமுக தலைவர் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்தினார்களா என்று கேட்டதற்கு அவர்களிடம் இருந்து எனக்கு பிறந்த நாள் வாழ்த்து எதுவும் வரவில்லை என்றார். மேலும், தனக்கு தாயார் தயாளு அம்மாள், செல்வி, சகோதரர் தமிழரசு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர் என்றார்.
மீண்டும் திமுக தலைமை சமரச முயற்சி மேற்கொண்டால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டதற்கு, கலைக்கப்பட்ட மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்; அவர்களை சஸ்பெண்ட் செய்ததை நீக்கம் செய்தால் மட்டுமே சமரசத்துக்கு உடன்படுவேன் என்றும் நிபந்தனை விதித்தார். அவர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடவில்லை எனில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

ad

ad