புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

ஆனையிறவு புகையிரத நிலைய பெயர் மாற்றத்திற்கு சீ.வி.கே.சிவஞானம் கண்டனம்: அமைச்சர் பந்துலவுக்கு கடிதம்
கிளிநொச்சி- ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு வடமாகாணசபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், இந்நடவடிக்கை தமிழ் சமுகத்தின் வரலாற்றுப்
பாரம்பரியத்தை சிதைக்கும் மோசமான நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
புகையிரத நிலைய பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கடந்த 3ம் திகதி சீ.வி.கே.சிவஞானம் மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,
கடந்தாண்டு டிசம்பர் 29ம் திகதி ஆங்கில வாரா இதழ் ஒன்றில் ஆனையிறவு புகைரத நிலையத்தின் பெயர் மாற்றம் தொடர்பான செய்தி ஒன்றி வெளியாகியிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
புகைரத நிலையத்தினை மீள் நிர்மாணம் செய்வதற்கான தாங்கள் நிதி சேகரிக்கும் நடவடிக்கையினை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் நீண்டகாலம் பழக்கத்தில் உள்ள தமிழ் பெயரும், அன்னிய ஆட்சியாளர்களால் கொடுக்கப்பட்டதுமான ஆனையிறவு என்ற தமிழ் பெயரை “செனகசக தொட்டபொல” என பெயர் மாற்றம் செய்வதற்கு தாங்கள் எடுக்கும் முயற்சிகள் எம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடியவையல்ல.
ஆனையிறவு என்ற தமிழ் பெயர் பண்டைய காலத்தில் இப்பகுதியில் இடம்பெற்ற பாரிய யானை வர்த்தகம் தொடர்பாக எழுந்தது.
எனவே இந்த தமிழ் பெயரை மாற்றம் செய்வதற்குப் பின்னாலுள்ள காரணங்களை அல்லது தேவைகளை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசாங்கம் பாரபட்சம் மற்றும் அழிவுகளின் காயங்களை ஆற்றுவதாகவும், சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறிவரும் நிலையில் இது முற்றிலும் முரணான விடயமாகும்.
எனவே இத்தகைய பெயர் மாற்றும் நடவடிக்கையினை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். அல்லது எதிர்க்கவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றோம். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தன்னிடம் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad