புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2014

ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் குடும்பம், ஐ.தே.கட்சியில் இணையவுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் குடும்பம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அது பற்றிய தகவல்களை தற்பொழுது வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அரசாங்கத்தில் இணைந்து கொள்ள மாட்டார்.
அவர் அமைதியான முறையில் கட்சிக்காக பணியாற்றி வருகிறார். தனிப்பட்ட காரணங்களினனால் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்யவில்லை.
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட பலர் விண்ணப்பங்களை செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து்ளளார்.
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக அவர் கூறியது வரவேற்கப்பட வேண்டியது.
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்ய 6 மாவட்டங்களில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னதாக வேட்பாளர் பட்டியல்களை தயாரித்து அதனை பிரதான வேட்புமனு குழுவிடம் கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad