புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

வெற்றியுடன் தொடரை முடித்தது ஆஸ்திரேலியா

    இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-1 என தொடரை வெற்றியுடன் முடித்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது ஆட்டம் அடிலெய்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 4-வது ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஷான் மார்ஷ் 36 ரன்களும், ஜார்ஜ் பெய்லி 56 ரன்களும் அடித்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் அலெஸ்டர் குக் 39 ரன்களும், ஜோ ரூட் 55 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்குப் போராடினர்.
    கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஃபாக்னர் ஆட்ட நாயகன் விருதையும், ஆரோன் ஃபின்ச் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினர்.
    ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 5-0 என முழுமையாக இழந்தது. ஒருநாள் தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

    ad

    ad