புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014


அமெரிக்க போர்க் குற்ற நிபுணர் ஸ்டீவன் ராப்பின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது
ஸ்டீவன் ராப், ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளது.மன்னார், யாழப்பாண பேராயர்கள் மற்றும் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலிச் சாட்சிகளை ராப் ஏற்றுக்கொண்டுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த போலி சாட்சியங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை.
போர் சூனிய வலயத்தில் படையினர் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மன்னார், யாழ்ப்பாண ஆயர்கள் சுமத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஸ்டீவன் ராப்பின் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானங்கள் அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
அமெரிக்காவின் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை கேள்வி எழுப்பியதனால் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

ad

ad