புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2014

அமெரிக்க தூதரகங்கள் ஓட்டல், பார், வீடியோ கிளப் நடத்த  தடை : இந்தியா உத்தரவு
 இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் கைதுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி செய்தார்
என்று குற்றம் சாட்டி, அவரை அமெரிக்க போலீசார் சாலையில் வைத்து கைது செய்தனர். அவரது உடைகளை களைந்து சோதனையிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு தரப்பட்டு இருந்த சிறப்பு சலுகைகள், அதிகாரங்கள் ஆகியவற்றை  இந்திய அரசு ரத்து செய்தது.
அமெரிக்க தூதரகத்தில் வேலைசெய்யும் இந்தியர்கள், அவர்களுக்கு தரப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு கூறியது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், தனிப்பட்ட முறையில் உணவகங்கள், பார், வீடியோ கிளப், ஸனோ பவுலிங் விளையாட்டுகள், நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், அழகு நிலையம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.
வியன்னா விதிகளின் கீழ் தூதரகங்களில், வர்த்தக ரீதியான செயல்பாடுகள் செய்யக்கூடாது. இதனால் டெல்லி அமெரிக்க தூதரகத்தில் செயல்பட்டு வரும் வர்த்தக செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தனிப்பட்ட முறையில் அமெரிக்கர்கள் நடத்தும் வர்த்தகங்களுக்கான உரிமம் மற்றும் இவற்றுக்கான வர்த்தக வரிகள் செலுத்தியது தொடர்பான விபரங்களை உடனடியாக மத்திய அரசிடம் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தூதரக வாகனங்களுக்கு தரப்பட்ட தனிசலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தூதரக வாகனங்களை சாலையில் எங்கு வேண்டுமானலும் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு விளக்கு எரியும் சமயத்தில் நின்று செல்லவேண்டும், மோசமாக வாகனம் ஓட்டக் கூடாது, இந்திய சட்டப்படி வாகன எண்கள் இருக்கவேண்டும், இந்திய சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ad

ad