புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

கெஜ்ரிவால் ஆட்சி விரைவில் கவிழும்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கூறுகிறார்
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி. இவருக்கு மக்களவை சீட் கொடுக்க கட்சி மறுத்துவிட்டது. எனவே ஜனவரி 15ஆம் தேதி டெல்- முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பொய்யர்
என்று பின்னி குறிப்பிட்டார்.

அதற்கு அடுத்த நாள், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பின்னி குற்றம் சாட்டினார். 
இதனைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக பேசியதற்காக பின்னியிடம் விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி கட்சி நோட்டீஸ் அனுப்பியது. 
எம்எல்ஏ வினோத்குமார் பின்னி கட்சித் தலைமைக்கு எதிரான அறிவிப்புகளை பகிரங்கமாக வெளியிடுகிறார் எனக்கூறி ஞாயிற்றுக்கிழமை அவர் கட்சியி-ருந்து நீக்கப்பட்டடார். 
இதையடுத்து பின்னி செய்தியாளர்களிடம் பேசியதாவது, 
மக்களின் கவலைகளை கவனத்துக்கு கொண்டுவரும்போது ஒரு கட்சி தனது எம்எல்ஏவை நீக்குவது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சி கவிழும் நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. 
இதன் மூலம் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் மக்களுக்கு தேவையான முக்கியமான விஷயங்களில் என் கருத்தை தொடர்ந்து வெளியிடுவேன் என்றார்

ad

ad