புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

இலங்கையில் இனப்படுகொலை தொடர்கிறது! ஜெனிவாவில் அறிக்கை வெளியீடு
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை ஜெனிவாவில் இன்று வெளியிடப்பட்டது. அதில், இலங்கையில் போருக்கு பிறகும் இனப்படுகொலை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உறுதுணையாக இருந்ததாகவும், இலங்கையின் கூட்டாளிகளாக செயல்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிரந்தர மக்கள் தீர்ப்பாய பொதுச் செயலாளர் கியன்னி டோக்னொனி இந்த அறிக்கையை வெளியிட்டு பேசுகையில், இலங்கை இராணுவமும், காவல்துறையும் மக்களை துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமைகள் செய்தன என்றும், பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
இலங்கையில் போருக்கு பிறகும் இனப்படுகொலை தொடர்கிறது என்று கூறியுள்ள டோக்னொனி, இறுதி கட்டப் போரின்போது ஜனவரி முதல் மே மாதம் வரை பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டில் இருந்து தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும், புலம் பெயர்ந்த தமிழர்களின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் பல கட்டங்களாக இனப்படுகொலைகள் நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், போரின் போது இலங்கை இராணுவத்திற்கு இங்கிலாந்து அரசு ஆயுத உதவிகள் செய்தது என்று தெரிவித்துள்ளார்.

ad

ad