புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

தற்­கொ­லைக்கு முயன்­ற­வரை காப்­பாற்­றிய இங்­கி­லாந்து வீரர்கள்

ஆற்றில் குதித்து தற்­கொ­லைக்கு முயன்ற ஒரு­வரை இங்­கி­லாந்து கிரி க்கெட் அணியின் வீரர்­க­ளான ஸ்டூவர்ட் ப்ரொட்டும் மெட் பிரை­யரும் காப்­பாற்­றிய சம்­பவம் ஒன்று சிட்னியில் நடை­பெற்­றுள்­ளது.
 
அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இங்­கி­லாந்து அணி அவுஸ்­தி­ரே­லிய அணி­யு­ட­னான ஆஷஷ் தொடரில் தோல்­வியை சந்­தித்­துள்ள நிலையில் அவ்­வ­ணி­யு­ட­­னான ஒருநாள் தொடரில் மோத­வுள்­ளது.
 
இந்­நி­லையில் சிட்­னியில் உள்ள அறக்­கட்­டளை நிலையம் ஒன்­றுக்கு நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ப்ரொட்டும் பிரை­யரும் தாம் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்க திரும்­பிக்­கொண்­டி­ருக்கும் வேளை­யி­லேயே இந்த உயிர் காக்கும் உய­ரிய சம்­பவம் நடை­பெற்­றுள்­ளது.
 
இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
 
ப்ரொட்டும் பிரை­யரும் ஹோட்­ட­லுக்கு திரும்­பிக்­கொண்­டி­ருக்­கையில் டார்லிங் ஹார்பர் பகு­தியின் பாலத்தில் நின்ற அடை­யாளம் தெரி­யாத நபர் ஒருவர் தனது கைத்­தொ­லை­ ­பேசி மற்றும் சில உட­மை­களை ஆற்றில் வீசு­வதை அவ­தா­னித்­தனர். பின்னர் குறித்த நபர் திடீ­ரென பாலத்தின் முனைக்கு சென்று குதிப்­ப­தற்கு தயா­ரானார்.
 
இந்­நி­லையில் விரைந்து செயற்­பட்ட ப்ரொட்டும் பிரை­யரும் லாவ­க­மாக பேசி அவரை தற்­கொலை முயற்­சி­யி­லி­ருந்து தடுத்து அழைத்து வந்த­தனர். பின்னர் பொலி­ஸுக்கு தக­வலை தெரிவித் அவர்கள் பொலிஸார் அங்கு வந்­ததும் குறித்த நபரை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைத்து விட்டு சென்­றுள்­ளனர்.
 
இங்­கி­லாந்து வீரர்­களின் இந்த உயிர் காக்கும் முயற்­சிக்கு பலரும் பாராட்டு தெரி­வித்­துள்­ளனர். ஆனால் பிரையர் இது குறித்து கூறும்போது ‘எங்கள் நிலையில் யாராக இருந்தாலும் அவர்களும் இதுபோன்றே செயல்பட்டிருப்பார்கள்’ என தன்னடக்கமாக கருத்து கூறியுள்ளார்.

ad

ad