புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2014

திமுக அழிந்துவிடும்: சுப்ரமணிய சுவாமி

அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
திமுகவில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணிய சுவாமி, தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்பது குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே பாஜக மேலிடத்திடம் தெரிவித்துவிட்டேன்.
என் கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று தெரியவில்லை.
அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்து போகும்.
ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள்.
அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது, அதே போன்று திமுகவும் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad