புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014


ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்! 


 

டெல்லி மேல்– சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 7ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20ந் தேதி தொடங்கியது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 5 வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும். இதில் அ.தி.மு.க. வேட்பாளராக நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் முத்து கருப்பன், மாநில மகளிர் அணி செயலாளர் சசிகலா புஷ்பா, நெல்லை மாநகர மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த், அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் ஆகிய 4 பேரை முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
மீதமுள்ள ஒரு இடம் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு வழங்கப்பட்டது. அக்கட்சி வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் எம்.பி. மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேரும் 27.01.2014 திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு தங்கள் வேட்பு மனுக்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலாளருமான ஜமாலுதீனிடம் தாக்கல் செய்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு வேட்பாளர்கள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர். இதேபோல் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ad

ad