புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

விஜய் எங்கள் கட்சியில் சேரலாம்.ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு 

விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக  வந்த செய்தி பற்றி கூறுகையில் இவ்வாறு தெரிவிக்கக்கப்பட்டது இளைய தளபதி விஜய் விரும்பினால் அவர் தாராளமாக எங்கள் கட்சியில் சேரலாம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

நடிகர் விஜய் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக பேச்சாகக் கிடக்கிறது. இது குறித்து ஊடகங்களிலும் கூட செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை ஒரு முன்னணி நாளிதழ் அணுகி விஜய் விவகாரம் குறித்து கேட்டுள்ளது. அதற்கு அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தா கூறுகையில்,
 
விஜய் மட்டும் அல்ல வேறு எந்த திரை உலக நட்சத்திரங்களும் எங்கள் கட்சியில் சேர எங்களை இதுவரை அணுகவில்லை. விஜய் மற்றும் வேறு எந்த நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்கள் தாராளமாக எங்கள் கட்சியில் சேரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

ad

ad